வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மார்ச் 25. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.


பேராவூரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் கடைத்தெரு முழுவதும் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பரப்புரையில் ஈடுபட்டனர்.


கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமையில், பேராவூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை, தேர்தல் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நாட்டு நலப்பணித்  திட்ட அலுவலர் முனைவர் சி.ராணி, கல்லூரி விரிவுரையாளர்கள் மு.பபிதா, மோகனசுந்தரம், வருவாய் அலுவலர் எஸ்.ஜெயதுரை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 


முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து வட்டாட்சியர் தெய்வானை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.


அனைவரும் வாக்களிப்போம், மக்களாட்சிக்கு மதிப்பளிப்போம் என்று மாணவர்கள் முழக்கமிட்டு பரப்புரை மேற்கொண்டனர்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா