ஐந்து வயது நிரம்பிய பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி மாணவர்கள் பெற்றோர்கள் பேரணி
பேராவூரணி அருகே பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்த்திய விழிப்புணர்வு பேரணி இன்று இன்று 04.03.2024 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஐந்து வயது நிறைவடைந்த மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்கச் செய்வோம்! நமது பள்ளி அரசு பள்ளி! அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் பள்ளி அரசு பள்ளி என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி அமைந்திருந்தது.
கல்வியின் அவசியம் குறித்தும் கல்வி கற்பதன் நோக்கம் குறித்தும் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறினர். பேரணியானது பள்ளியில் தொடங்கி ஊர் முழுவதும் சுற்றி வந்தது.
பெற்றோர்களே அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான காரணங்களை பதாகைகளாக ஏந்தி நேரடியாகச் சென்றது பகுதியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக