மனிதம் பேசும் "மட்டைக் கஞ்சி"
அன்புமிக்க தோழர் பா. பாலசுந்தரம் அவர்களின் எழுத்துப் படைப்புதான் மட்டைக்கஞ்சி.
கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, உரைநடை இயலாளராக தோழர் படைத்தளித்திருக்கும் இந்த மட்டைக் கஞ்சி மனிதம் பேசுகிறது.
வேர்கள்
கரவை மாடு
கோழி கூடை
மட்டைக்கஞ்சி
அழகி
உல்லானும் சுல்லானும்
ஊருக்குள் தாகம்
பூந்தோட்டம்
அமுதசுரபி
ஒன்பது கதைகள்.
தனது பொதுவுடமைக் கனவுகளை கதைகளாக மாற்றி தந்திருக்கிறார் ஆசிரியர்.
சமூகத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய அன்பு நிறைந்த கூட்டுக்குடும்பம் குறித்தும் பெற்றோர்கள் பிள்ளைகளை பேணிக்காத்த வாழ்வியலையும் விளக்குகிறது வேர் சிறுகதை.
கால்நடைகளுக்கு கருணை காட்டும் மனிதம், ஊரை அரவணைக்கும் அன்பின் குணம் இவற்றை விளக்குகிறது கறவை மாடு . மனுசியாக இருந்தால் என்ன மாடாக இருந்தால் என்ன கர்ப்ப வேதனையின் தாய்மையை பறைசாற்றுகிறது.
விட்டுக் கொடுக்கும் உயர் பண்பு, இருப்பதையெல்லாம் கொடுக்கும் அன்பு எளியவர்களிடம் மட்டுமே ஊறி திளைக்கும் உயர்குணம், எளிமையின் அற்றத்தை போக்கிடும் அறிவின் ஆற்றல் இவற்றையெல்லாம் ஒன்றாக பேசுகிறது கோழி கூடை.
நாகரீக உலகில் பெண்ணியம் பேசும் "வீரம் நிறைந்த அழகை" பெற்றிட விவேகமாய் அறிவுறுத்துகிறது அழகி சிறுகதை
"அன்பு" இது உயிர் பண்பு. மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல உலக உயிர்களை ஒன்றிணைக்கும் ஒப்பற்ற சக்தி 'அன்பு' என்பதை உல்லானும் சுல்லானும் உணர்த்துகிறது.
மக்கள் திரளின் ஆற்றல், இளமையின் பேராற்றல் குறித்து பேசுகிறது ஊருக்குள் தாகம்
பள்ளிப் பருவத்து நட்பின் வலிமையை பரிசாற்றுகிறது பூந்தோட்டம்.
குப்பையில் நாற்றம் எடுக்கும் கார்ப்பரேட் கூடாரங்களால் வளர்த்தெடுக்கப்படும் நுகர்வுப் பண்பாடு குறித்து உணர்த்துகிறது அமுதசுரபி.
ஒவ்வொரு கதையிலும் அறத்தின் மணம் கமல்கிறது.
மோனை கலந்த எழுத்து நடை படிப்பதற்கு சுவை கூட்டுகிறது.
ஒவ்வொரு கதையும் நம் வாழ்க்கைப் பயணத்தில் கடக்கும் காட்சிகளாக விரிகிறது.
பண்ணை அடிமைத்தனத்தின் கோர முகம் காட்டுகிறது. ஏழை எளிய நமது முன்னோர்கள் அனுபவித்த பண்ணை அடிமைச் சமூகத்திலிருந்து நம்மை காத்த போராளி சமூகங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கச் செய்கிறது.
தன் வாழ்வோடு பின்னிப் பிணைந்த மனிதர்களை கதை மாந்தர்களாக மாற்றி கருணையை விதைத்திருக்கிறார் அன்புத் தோழர்.
"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்" வெளியீடாக வந்திருக்கும் "மட்டைக் கஞ்சி" மனிதம் பேசும் நெறி நூல்.
"மட்டைக் கஞ்சி" நூல்வாசிக்க பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்துக்கு வாங்க!
தோழர் பா பாலசுந்தரம் அவர்களோடு
பேச 9443976542.
கருத்துகள்
கருத்துரையிடுக