பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் '"உலக பை நாள்" கொண்டாட்டம்.



கணித உலகில் பரவலாக கொண்டாடப்படும் உலக பை நாள் பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.  


பை மாறிலியின் தன்மைகள் குறித்து மாணவர்களிடம் விளக்குவதற்காக இந்த நாளை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


பெண்கள் நாள் தெரியும், அன்னையர் நாள் தெரியும், ஏன்

காதலர் நாள் கூட தெரியும். 

அதென்ன "பை நாள்" என்று கேட்கிறீர்களா?


பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது.


3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" நாளாக கொண்டாடப்படுகிறது.


"பை நாள்" மற்றும் "பை எண்ணளவு நாள்" என்பன 'π' என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும்.


மாறிலியின் மதிப்பு:


ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். 


இந்த எண் அதாவது 3.14 என்பது எண்ணளவாக பையையும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926).


ஐரோப்பாவில் ஜூலை 22:


பை எண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் (பையின் பரவலாக அறிந்த பின்ன எண்ணளவு 22/7 ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது


கலிபோர்னியாவில் முதல் பை நாள்:


பை நாள் முதன்முறையாக 1988 இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப சாலையான எக்ஸ்புளோடோரியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் அத்தொழில்நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.


பை இனிப்புடன் முடிந்தது:


அணிவகுப்பின் முடிவில் வட்ட வடிவிலான பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது.  


அந்த அடிப்படையில் பொன்னாங்கண்ணி காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்ட வடிவிலான இணைப்பு மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.  


நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, கணித ஆசிரியர் முருகையன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா