இந்தியச் சூழலும்-ஒபாமா கருத்தும்
இந்தியச் சூழலும்-ஒபாமா உரையும் பட உதவி: தினத்தந்தி இணையம் மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும் - ஒபாமா உரை - ஊடகச் செய்தி இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையை உலகமே கடைபிடிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியாவில் அது கேள்விக்குறியாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் இந்த கருத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து, கிறித்தவமோ, இசுலாமோ பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலெல்லாம் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறதா என்ற நோக்கிலேயே விவாதித்து வருகிறார்கள். ( 27.01.2015 புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ச.கவின் பொறுப்பாளர் இராகவனின் கருத்து) உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை நாம் சொன்னால் ஆட்சியாளர்கள் பகவத் கீதையை முன்மொழிகிறார்கள். மத்திய அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் சமற்கிருதம் கட்டாயப்படுத்தப்படுகிறது. மதச் சிறுபான்மை மக