புதுப்பொலிவுடன் அரசி காய்கறி கடை
பேராவூரணி புதிய பேருந்து நிலையம் முகப்பு வணிக வளாகத்தில் பெரியாரிய சிந்தனையாளர் திராவிடர் கழக பொறுப்பாளர் மரியாதைக்குரிய தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் அரசி காய்கறி கடை புதுப்பொலிவோடு தொடங்கப்பட்டுள்ளது.
ஞாயிறு காய்கறி சந்தை எதிரில் இயங்கி வந்த இந்த கடை தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு பேருந்து நிலைய பேரூராட்சி வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அன்புத் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வணிக நிறுவனமான இக்கடையில் காய்கறிகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
"அஃகம் சுருக்கேல்"
என்ற ஔவையின் மொழிக்கு ஏற்ப தோழரும் அவரின் இணையரும் காய்கறிகளை நிறைவாக எடையிட்டு மன மகிழ்வோடு தருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்.
புன்னகை பூத்த முகத்துடன் வாடிக்கையாளர்களை வரவேற்று வணிகம் செய்யும் இவர்களின் காய்கறி கடை மேன்மேலும் வளர்ந்து வளம் சேர்க்க மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
வாழ்த்து கூறவும், வாடிக்கையாளர் சேவைக்கும் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு பேச : 9943028040
கருத்துகள்
கருத்துரையிடுக