பிரியாணி மாஸ்டர் மகன் பள்ளியில் முதல் மதிப்பெண்!

தடைகளைத் தகர்த்தெறிந்து சாதனைகளைத் தனதாக்கிக் கொள்ளும் மாணவர்கள் சமூகத்தின் முன்னுதாரணங்களாகப் போற்றப்படுகிறார்கள். 


வறுமை, வாழ்வியல் போராட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டிக் குதித்து வெற்றி நடை போடுபவர்களே பலரின் வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்கள்.  


வசதியான பள்ளி சூழல், சிக்கல் இல்லாத வாழ்வியல் கொண்ட பிள்ளைகள் எளியவர்களின் வாழ்வியலை புரிந்து கொள்ள முடியாமல் சமூகத்திற்கு சிக்கலாக மாறியிருக்கிறார்கள்.  


பேராவூரணியில் ஜோ பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்த ஜோ பாக்கியசாமி - ஜெனிபர் இணையரின் மகன் சிமியோன், ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளான்.  மாணவன் சிமியோன் பத்தாம் வகுப்பில் 473 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பெற்றுள்ளான்.  


தனது வறுமை நிலையையும் பொருட்படுத்தாது கொரோனா ஊரடங்கு காலத்தில் எளிய மக்களுக்கு நாள்தோறும் உணவு சமைத்துக் கொடுத்து இப்பகுதி மக்களால் பாராட்ட பெற்றவர் ஜோ பாக்கியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.


பெற்றோரின் வறுமை நிலை கருதி பொறுப்புடன் படித்து பள்ளிக்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்த சிமியோனுக்கு மெய்ச்சுடர் வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா