490 மதிப்பெண்

களத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளி வரலாற்றில் 490 மதிப்பெண் என்பது இதுவரை எந்த மாணவரும் எட்டிப்பிடிக்காத இலக்கு.  


ஊரகம் சார்ந்த பள்ளியில் எளிய பெற்றோர்களின் பிள்ளைகள் சாதனைகளை புரியும் பொழுது மகிழ்ச்சி இயல்பாய் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.


களத்தூர் குமார் - நீலா இணையரின் மகள் பிரியாமணி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 490 மதிப்பெண் பெற்று ஊருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 


தந்தையின் பெயரையும் அவரின் தொழிலையும் சொல்லி வீட்டை விசாரித்த பொழுது கிடைக்காத விடை, பெரிய பள்ளிக்கூடத்தில் மொத மதிப்பெண் எடுத்த அந்தப் பொண்ணு வீடு எது? என்று கேட்டதும் வழியை விழிகளால் சொல்லிவிடுகிறார்கள் ஊர்க்காரர்கள்.  வழி சொல்லும் பொழுது அவர்களின் முகத்தின் எழுந்து நிற்கும் பெருமிதம் பேரானந்தமாய் நம் மனதில் பாய்கிறது.


களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் மாணவி பிரியாமணி பெற்றோர்களும் தனது வெற்றிக்கு காரணம் என்கிறார். 


கிராமத்து அரசுப் பள்ளியில் படித்து 490 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ள மாணவி பிரியாமணி மேல்நிலைப் படிப்பையும் அரசு பள்ளியிலேயே தொடர விரும்புவதாக தீர்க்கமாக கூறுகிறார்.


பள்ளிக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும், உறவுகளுக்கும் பெருமை சேர்த்துள்ள பிரியாமணிக்கு மெய்ச்சுடரின் அன்பு வாழ்த்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு

"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு