சமயப்பொறை
இது ஒரு செய்தியா?
காலம் காலமாக நடப்பது தானே?
உண்மைதான்..!
சமகாலத்தில் இதை செய்தியாகச் சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஒவ்வொரு நாளும் மத வெறுப்புணர்வு தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
உலக சமயங்களின் சகோதரத்துவம் பேசிய விவேகானந்தர் பிறந்த மண்ணில் மதவாதம் விதைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
சமரச சுத்த சன்மார்க்கம் சுடர் விட்ட மண்ணில் சமயங்களுக்குள் பேதம் கற்பிக்கப்படுகிறது. சனாதன சாயம் பூசப்படுகிறது.
ஓரினமாய் ஒற்றுமையுடன் வாழ வேண்டியவர்களிடம் மதவாதம் ஊற்றப்படுகிறது.
அதனால்தான் நமது ஒற்றுமையை உலகம் உற்றுப் பார்க்க படம் எடுத்துப் பரப்புரை செய்கிறோம்.
அடுத்த தலைமுறைக்கும் தொட்டுத் தொடரும் தமிழின ஒற்றுமையை தரணிக்கு எடுத்துச் சொல்கிறோம்.
ஊருணிகள் நிறைந்து நிற்கும் பேராவூரணி தண்ணீரில் மதவாதப் பருப்புகள் வேகாது என்பதை உலகமெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறோம்.
முடப்புளிக்காடு திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் திருவிழா ஒளி வெள்ளத்தில் பளிச்சென தெரிவது இசுலாமிய நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகை மட்டுமல்ல தமிழ் மக்களின் சமூகப் பண்பாடும்தான்.
நம்பிக்கையுடன்...
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக