தோழர் முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளில் கல்விக் கட்டமைப்பு பணிகள்

ஏப்ரல் 1. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கு இனிய தோழர் முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளை ஒட்டி நெடுவாசல் கிராமத்தில் தோழரின் பெயரில் அமையப்பெற்றுள்ள கலையரங்கத்தில் தோழரின் உருவப்படத்திற்கு பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழமைகளால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தோழரின் நினைவு நாளை ஒட்டி இப்பகுதி இளைஞர்களால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கூடங்களின் தேவைகள் பட்டியலிடப்பட்டது.   அதற்குரிய நிதியை பல்வேறு தரப்பிலிருந்தும் பெற்ற தோழர்கள் இன்று தோழர் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்தனர்.  


"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 

செல்லும்வாய் எல்லாஞ் செயல்" 


வள்ளுவன் வகுத்த நெறிப்படி ஒட்டுமொத்த மக்களுக்காகவே தனது வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த தோழர் முத்துக்குமரன் அவர்கள் தனது மறைவுக்குப் பிறகும் தனது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தோழமைகளைக்கொண்டு தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.  


நினைவு நாளை இப்பகுதி பள்ளிகளின் வளர்ச்சி நாளாக மாற்றிட பெரும் பங்காற்றிய அன்புத் தோழர் நெடுவாசல் ராம்குமார் ராமச்சந்திரன் உள்ளிட்ட தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா