நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா
மார்ச் 31. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஆத்தாளூரில் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்களால் சாலை மற்றும் கோவில் வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஏழாவது நாளான மார்ச் 31 ஞாயிறு அன்று நிறைவு விழா ஆத்தாளூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சி. இராணி சிறப்பு முகாமின் திட்ட அறிக்கையினை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆத்தாளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயாஞ்சலி, ஆசிரியர் பூங்கோதை, பேராசிரியர் முனைவர் சதீஷ்குமார், பேராசிரியர் முனைவர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர் மணிகண்டன், பேராசிரியர் சிவரஞ்சனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் மாணவர்கள் தங்களின் சிறப்பு முகாம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பார்வதி, கல்லூரி காவலர் காளிமுத்து உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேராசிரியர் மு. பபிதா வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி அஸ்விகா நன்றியுரை நவின்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக