பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் பெரும் கொண்டாட்டமாய் நடந்த பன்னாட்டு பெண்கள் நாள் விழா.
பேராவூரணி. உலக உழைக்கும் மகளிர் நாளை முன்னிட்டு பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மகளிர் நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூலக வாசகர் வட்டம் சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திருவள்ளுவர் கல்விக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள், பாரதி தையல் பயிலக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடல் பாடியும் கதை கூறியும் நடனமாடியும் மகிழ்ந்தனர்.
பங்கேற்ற அனைவருக்கும் திருவள்ளுவர் கல்விக்கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொண்டாட்டத்தின் இடையில் பேராவூரணி எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன் பங்கேற்று பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பங்கேற்ற பெண்கள் எஸ்பிஐ வங்கிக் கிளை சார்பில் வழங்கப்பட்ட கேக்-கினை வெட்டி மகிழ்ந்தனர்.
பேராவூரணி திருக்குறள் பேரவை தலைவர் ஆறு நீலகண்டன், ஆலமரத்து விழுதுகள் அமைப்பின் பொறுப்பாளர் மணிகண்டன், திருவள்ளுவர் கல்விக்கழக பொறுப்பாளர் த.பழனிவேல், வட்ட சார் ஆய்வாளர் ரெ. சந்தோஷ், அரசு கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் பா சண்முகப்பிரியா, பிரபா, பாரதி தையல் பயிலக ஆசிரியர்கள் நித்யா, உமா, பொன்-காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் க.சரண்யா, திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், அமிழ் விளையாட்டுக் கழக ஆசிரியர் மருத உதயகுமார், ஸ்டீபன்-ஹாக்கிங் அறிவியல் மன்ற பொறுப்பாளர் தா.கலைச்செல்வன், பெரியார் அம்பேத்கர் நூலக பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பான நிகழ்வு, வாழ்த்துக்கள் மெய்ச்சுடர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும்..
பதிலளிநீக்கு