குருதிக்கொடை முகாம்



 பேராவூரணி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையோடு இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம் பேராவூரணி பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.  

 பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஸ்வரிதேவி, மற்றும் மக்கள் மருத்துவர் துரை நீலகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  

மேலும் வர்த்தகக் கழக கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ச.கந்தப்பன், மேனாள் தலைவர் ஆர் பி ராஜேந்திரன், திராவிடர் கழக பொறுப்பாளர் வை. சிதம்பரம், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி உள்ளிட்ட நகரின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் காயத்ரி மேற்பார்வையில் குருதிக்கொடை முகம் நடைபெற்றது. பேராவூரணி அரசு மருத்துவமனை ஆய்வக பணியாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இன்றைய நிகழ்வில் தகுதியுள்ள 52 நபர்களிடமிருந்து குருதி கொடையாக பெறப்பட்டது.   

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பேராவூரணியின் பல்வேறு பகுதிகளில் முகாம் குறித்த விழிப்புணர்வு கையேடு, அமைப்பு சார்பில் பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டது.  

குருதி வங்கியில் வைக்கப்பட்டுள்ள குருதி இருப்பு குறைந்தால் முகாம் நடத்த மருத்துவர்கள் அழைக்கும் அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறியப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் குருதிக்கொடை கொடுப்பதில் முன்னணி அமைப்பாக இந்த அமைப்பு செயல்படுகிறது. பேரிடர் காலங்களில் இவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.  

"ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" என்ற திருக்குர்ஆன் வரிகளை மேற்கோள்காட்டி இவர்கள் செய்து வரும் மகத்தான சேவையை மெய்ச்சுடர் வாழ்த்துகிறது.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.





















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா