“அறிவியல் மனப்பான்மை மாணவர்களிடம் வளரும்போது சமூகத்தில் மூடநம்பிக்கை முற்றும் அழிந்து போகும்” அறிவியல் மன்ற தொடக்க விழாவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உரை



''வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்'' என்ற பாரதியின் பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஐன்ஸ்டீன் - ஹாக்கிங் அறிவியல் மன்றம் என்ற அறிவியல் இயக்கம் பேராவூரணியில் தொடங்கப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனைகளால் தான் நாம் அனுபவிக்கும் அத்தனையும் படைக்கப்படுகிறது.
எதிர்கால அறிவியல் உலகத்தின் ஆற்றல்களாக இருப்பவர்கள் மாணவர்கள். அவர்களிடம் அறிவியல் சார்ந்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த மன்றம் தொடங்கப்பட்டிருக்கிறது.
பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் "வானை அளப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வின்வெளி புகைப்படக்கலைஞர் வி.பரமேஷ்வரன் வழிகாட்டுதலில் மாணவர்கள் தொலைநோக்கி வாயிலாக சூரியனை கண்டுகளித்தனர்.
ஐன்ஸ்டீன் குறித்தும் ஹாக்கிங் குறித்தும் அறிவியல் மன்ற பொறுப்பாளர் தா.கலைச்செல்வன் நிகழ்த்திய உரை மாணவர்களிடம் உற்சாகத்தை உருவாக்கியது. அவர் தனது உரையில்
"கணக்கியலும் அறிவியலும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் அடிப்படை அறிவு. அறிவு அற்றம் காக்கும் கருவி.
அறிவியலாளர்கள் உலகத்திற்கு பொதுவானவர்கள். அவர்களின் படைப்புகள் உலகம் முழுமைக்கும் பொதுமையாக உள்ளது. அவர்கள் தேசம், இனம், மொழி கடந்தவர்கள்.
வானியல் நமக்கு வியத்தகு காட்சிகளை தருகிறது. நமது சிந்தனையை விரிவாக்குகிறது.
சமூக நீதிக்கு அடையாளமாக தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் காண்பது போல, மக்களுக்கான அறிவியலாளர்களாக ஐன்ஸ்டீன், ஹாக்கிங் அறியப்படுகிறார்கள். மாணவர்கள் தங்களது பிறந்த நாள்களில் அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி மகிழ வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அறிவியல் சிந்தனை வரும் பொழுது மூடநம்பிக்கைகள் நம் மனதை விட்டு நீங்கி விடும்" என்றார்.
அறிவியல் சார்ந்த விளையாட்டு கருவிகளைக் கொண்டு மாணவர்களிடம் செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.
மாணவர்கள் தங்களாகவே பல வண்ணத் தாள்களில் ராக்கெட் செய்து பறக்க விட்டது காண்பவர்களை பரவசப்படுத்தியது.
நிகழ்வின் இறுதிவரை மாணவர்கள் சோர்ந்து போகாமல் முழு கவனத்தோடு விருந்தினர்களின் உரையை கவனித்துக் கொண்டிருந்தனர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் த.முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேராவூரணி எஸ்பிஐ வங்கி கிளை மேலாளர் ராகவன் சூரியேந்திரன், திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், சித.திருவேங்கடம், முனைவர் பா.சண்முகப்பிரியா, மருத.உதயகுமார், செ.சண்முகம், அப்துல் சலாம், தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், ஆசிரியர் காஜா முகைதீன், அறந்தாங்கி டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சமூக நல அறக்கட்டளை தலைவர் மு.கண்ணதாசன், வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சு கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் க சரண்யா, பேரூராட்சி உறுப்பினர்கள் பழனியம்மாள் நீலமேகம், ஆர் கே ராஜேந்திரன், அஞ்சம்மாள் ராஜேந்திரன், ரெஜினா பீவி அப்துல் ரஹீம், மகாலட்சுமி சதீஷ்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வி. என் பக்கிரிசாமி, பொறியாளர் முருகேசன், பாரதி ராமன், தோழமைகள் மு.ரா.ரமேஷ், ச.வினோத், ஷேக் அப்துல்லா, தா. ராஜ்குமார், குண நீலேஷ், பள்ளி வளர்ச்சி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, திருக்குறள் பேரவை, திருவள்ளுவர் கல்விக் கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மன்றத்திற்கான கொடையாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்செய் பதிப்பகம் வெளியிட்ட "துப்பட்டா போடுங்க தோழி" என்ற நூல் பரிசாக வழங்கப்பட்டது.
ஆசிரியர், மெய்ச்சுடர்
13.03.2023


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா