பெரும் கொண்டாட்டமாய் நிகழ்ந்த பரிசளிப்பு விழா!



அமிழ் விளையாட்டுக் கல்விக் கழகம் நிகழ்த்திய மாணவர்கள் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா பெரும் கொண்டாட்டமாய் நிகழ்ந்தது.


போதிய வகுப்பறைகளும் கழிவறைகளும் இல்லாத கல்விக் கூடங்களில் விளையாட வழி இன்றி மன இறுக்கத்தோடு கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரும் விடுதலை உணர்வை விதைத்திருக்கிறது அமிழ் விளையாட்டுக் கல்விக் கழகம் (Amizh Sports Academy). விளையாட்டு ஆசிரியர் தோழர் மருத உதயகுமார் தொடங்கிய இந்த விளையாட்டுக் கழகத்தில், தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளேயே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


உடலினை உறுதி செய்யும் விளையாட்டு பயிற்சிகளில் பிள்ளைகளை சேர்த்து விட பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கல்விக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசளிக்கும் விழா பேராவூரணி உதயம் விழா அரங்கத்தில் நடைபெற்றது.


லயன்ஸ் சங்க பொறுப்பாளர் பொறியாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எஸ்பிஐ பேராவூரணி வங்கிக் கிளையின் முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன், மக்கள் மருத்துவர் துரை நீலகண்டன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசளித்தனர்.


பேராசிரியர் பா சண்முகப்பிரியா, வட்ட சார் அளவையர் ரெ.சந்தோஷ், சமூக செயற்பாட்டாளர்கள் ஆறு.நீலகண்டன், சித திருவேங்கடம், த. பழனிவேல், ஆயர் த ஜேம்ஸ், பாரதி ந. அமரேந்திரன், நெடுவாசல் ராம்குமார் ராமச்சந்திரன், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், தா.கலைச்செல்வன், ஓய்வு பெற்ற தமிழாசிரியை இந்திரா தேவி, ஆசிரியர் காஜாமுகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்ச்சியின் நிறைவில் ஆட்டமும் பாட்டமுமாய் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நிகழ்ந்தது. 


நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், உறவினர்கள் உற்சாகமாய் கலந்து கொண்டு ஆடிப் பாடியது காண்பவர்களை கவர்ந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா