"கல்வி மற்றும் வேலை உரிமை தாய்மொழியாம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே நூறு விழுக்காடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்" பன்னாட்டு தாய்மொழி நாள் விழாவில் சின்னப்பத்தமிழர் பேச்சு.
பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்பத்தமிழர், "தற்பொழுது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே நூறு விழுக்காடு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் திட்டங்களின் பெயர்களை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார். சிறப்