திருச்சிற்றம்பலம் சிறுவன் சதுரங்கப் போட்டியில் வாகை சூடி சாதனை


திருச்சிற்றம்பலம் ஷாலினி - இராமநாதன் அவர்களின் மகன் ஹரிஷ் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வாகை சூடி நம் பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தஞ்சை சதுரங்க விளையாட்டுக் கழகம் அமைப்பின் பொன் விழாவை ஒட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட 8 இருந்து 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சதுரங்க போட்டியில் ஹரிஷ் பங்கேற்று வாகையர் பட்டம் வென்றுள்ளார்.
தனது தாய் ஷாலினி அவர்களிடம் தொடக்கத்தில் சதுரங்கத்தை கற்றுக் கொண்ட ஹரிஷ் தற்பொழுது ஒரு வருட காலமாக புதுக்கோட்டை முகமது ஷெரீப் அவர்களிடம் சதுரங்கம் பயின்று வருகிறார்.
ஹரிஷின் தந்தை இராமநாதன் மாலத்தீவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புனல்வாசல் டான் போஸ்கோ பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் "சதுரங்கத்தில் உலக சாதனை புரிய வேண்டும் என்பதே எனது ஆசை" என்கிறார்.
சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை அனாயசமாக கையாளும் ஹரிஷ் வீட்டின் வரவேற்பு அறையில் வெற்றி பதக்கங்கள் வரிசை கட்டி நிற்கின்றது.

ஊரகங்களின் உட்பகுதிகளுக்குள் ஒளிந்திருக்கும் ஒப்பற்ற திறமைகள் வாய்ப்புகள் வசமாகும் போது வாகை சூடுகிறது என்பதை மெய்ப்பித்திருக்கிறார் ஹரிஷ்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைச் சிறுவனை வாழ்த்துகிறது மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா