இழந்த பெருமையை மீட்டெடுக்கப் போராடி வருகிறது பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி




பேராவூரணியின் பெருமைமிகு அடையாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.

இன்று பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்படுவதற்கு முன்பு தன்னைச் சுற்றி சுமார் 20 கிலோமீட்டர் விட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் அரவணைது வைத்திருந்தது பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
சுமார் 2000 லிருந்து 3000 மாணவர்கள்,
மாவட்டத்தில் தனக்கென மிகப் பெரிய விளையாட்டு மைதானம், பசுமையை அப்பிக்கொண்ட பள்ளி வளாகம் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாய் காட்சி தரும்.
ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை இலக்கிய மன்ற கூட்டம்,
விளையாட்டு நாள் விழா,
ஆண்டு விழா, விடுதலை நாள் விழா குடியரசு நாள் விழா அனைத்தும் உயிர்ப்போடு நடத்தப்படும். ஆசிரியர்களும் மாணவர்களும் இலக்கு நோக்கி பயணித்தார்கள்.
ஆயிரம் ஆயிரம் காரணங்கள்... இழந்து போன பெருமையை இன்று மீட்டெடுக்க போராடி வருகிறது.
பாழடைந்த பழைய கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது...
பழைய கட்டிடங்கள் பழுதுபார்க்கப்பட்டு இருக்கிறது...
பள்ளி வளாகம் எங்கும் பசுமையை போர்த்தும் வகையில் மீண்டும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்படுகிறது...
மாணவர்களிடம் வாசிப்புத் திறனை மேம்படுத்த விரிவான நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது...
விளையாட்டுத் திறனில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்...
எட்டாம் வகுப்பில் நடத்தப்படும் தேசிய தகுதி தேர்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்து, மாணவர்கள் வெற்றி கண்டு இருக்கிறார்கள்...
மாணவர்கள் சேர்க்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐயா சி. முதல்வன் அவர்கள் பெரும் முயற்சியோடு பள்ளியை மேம்படுத்த பணியாற்றி வருகிறார்...
மாணவர்களிடம் ஒழுக்கத்தையும் சுயமரியாதையையும் கற்றுக்கொடுத்து வகுப்பறை ஒழுங்கை உருவாக்கினால் கல்வித் தரம் தானாய் உயரும், மாணவர்கள் எண்ணிக்கையிலும் மாற்றம் வரும் என்ற பெரும் நம்பிக்கையோடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து பள்ளி வளர்ச்சிக்காய் செயலாற்றுகிறார் தலைமை ஆசிரியர்.
நமது பள்ளி நமது பெருமை.
---------------------------------------------------
பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் சாதனையாளர்களை அடையாளப்படுத்துங்கள்...
உங்களில்
கல்வியாளர்கள்...
விளையாட்டு வீரர்கள்...
ஆட்சிப் பணி அதிகாரிகள்...
வணிகத்துறையில் சாதனை புரிந்தவர்கள்...
நீதித்துறை ஆளுமைகள்...
சமூக செயல்பாட்டாளர்கள்...
ஆட்சியாளர்கள்...
இலக்கிய ஆளுமைகள்...
வேளாண் துறையில் சாதனை படைத்தவர்கள்...
இவர்களை அடையாளப்படுத்துங்கள்!
பள்ளியின் வளர்ச்சிக்காய் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்...
அடுத்த தலைமுறைக்கு நமது பள்ளியை எடுத்துச் செல்வோம்! இணைந்து....!
தொடர்பு கொள்ளுங்கள்
பள்ளி தலைமையோடு
பள்ளியின் வளர்ச்சிக்காக
சேர்ந்து பயணிப்போம்:
9842609980, 9443976609,
8012221224, 7395869397

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா