பனியோடு போராடி பள்ளிக்கு நிதி தந்த பொன்-காடு பள்ளி முன்னாள் மாணவர்



பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெரும் இட நெருக்கடியோடு பயணித்து வருவது குறித்து பலமுறை நம் தளத்தில் எழுதி இருக்கிறோம். பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக அந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் பெரு முயற்ச்சி எடுத்து வருகிறது.

பள்ளி ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் கழகத்தின் இந்தச் செயல்பாட்டுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர், தற்போது தென்கொரியா நாட்டில் பணியாற்றி வரும் தோழர் சுரேஷ் அவர்கள் பள்ளிக்கு நிலம் வாங்க தனது இல்லத்தில் உள்ளவர்கள் மூலம் முதற்கட்டமாக ரூ.5000-ஐ பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா கணேஷ்குமார், துணைத் தலைவர் மருத்துவர் அருண் சுதேஷ் இவர்களிடம் வழங்கியுள்ளார்.
பெரும் பனிப்பொழிவில் போராடி சேர்க்கும் செல்வத்தை பள்ளியின் வளர்ச்சிக்காக பங்களித்தத சுரேஷ் அவர்களின் செயலை பெரும் நற்காரியமாக மெய்ச்சுடர் கருதுகிறது. ஆகச்சிறந்த அறமாக போற்றுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட தோழர் ஜோதிகா சூர்யா அவர்கள் "நாம் கோவில்களை பராமரிப்பது போலவே மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும்" என்ற தனது கருத்தை தெரிவித்து இருந்தார். அவரின் கருத்தை நாமும் அப்படியே வழிமொழிகிறோம். பேராவூரணியைச் சுற்றியுள்ள கோவில்களில் எல்லாம் பெரும் செலவு செய்து திருவிழா எடுக்கிறோம். ஆனால் பல நூறு மாணவர்கள் படிக்கும் பள்ளியை பரிதாபமாக அப்படியே விட்டு விடுகிறோம் என்றால் இது அறமா? தொடர்ந்து பள்ளி வளர்ச்சியில் பங்கெடுப்போம்.
வெயிலும் பனியும் உச்சத்தைத் தொடும் தேசத்திலிருந்து பள்ளியை பாதுகாக்க கரம் நீண்டு இருக்கிறது. இது தொடர வேண்டும். தோழர் சுரேஷ் அவர்களின் செயல்களோடு உடன் நிற்கும் அவரின் இணையர் மேனாள் பேரூராட்சி உறுப்பினர் வனிதா, தந்தை சா.சு.துரைராஜன் அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா