பாதைகளையெல்லாம் படுகுழிகளாக மாற்றும் தொடர்வண்டித் துறை... பொதுமக்கள் அவதி...
நடைமுறையில் இருந்த இரயில்வே கேட்-களையெல்லாம் மூடிவிட்டு கீழ்ப்பாலம் அமைப்பதாகக்கூறி கிராமத்திற்குச் செல்லும் பாதைகளையெல்லாம் படுகுழிகளாக மாற்றிவருகிறது இரயில்வே நிர்வாகம்.
1) இந்தப் பாலம் அமைக்கும் பணிகளைத் திட்டமிடுவதற்கு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டார்களா?
2) இந்தப் பாலம் வடிவமைப்புகளுக்கு எந்தப் பொறியாளர் ஒப்புதல் அளித்தார்?
3) மக்கள் பயன்படுத்தவே முடியாத பாலங்கள் எதற்காக அமைக்கப்படுகிறது?
இதற்கென்று பல கோடிகளைக் கொட்டி ஒப்பந்தம் விடப்படுகிறதே! பாலம் அமைக்கும் பணிகள் முறையாக நடக்கிறதா? திட்டமிட்டபடி நடக்கிறதா? என்பதை இரயில்வே நிர்வாகம் பார்வையிடுகிறதா, இல்லையா?
4) ஒரு பாலம் அமைக்கும் பணியை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவாச் செய்வார்கள்?
4) ஒரு பாலம் அமைக்கும் பணியை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவாச் செய்வார்கள்?
5) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் "உடனடியாக பாலம் பணிகளை முடித்துத் தருகிறோம்" என்று எத்தனைமுறை போராடும் மக்களை வைத்துக்கொண்டு வாக்களித்தார்கள்! ஒப்பந்ததாரர்களின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதா என்று இந்த இரயில்வே நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுத்ததா?
6) இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
இந்தப்பாலங்கள் மக்கள் பயன்படுத்துவதற்காகவா? இல்லை மழைநீரைத் தேக்கி வைப்பதற்காகவா?
கீழே உள்ள படங்களைப் பாருங்கள் இது பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு கிராமத்திற்குள் செல்லும் பாதையில் இருந்த இரயில்வே கேட்டை எடுத்துவிட்டு அமைக்கப்பட்டுவரும் கீழ் பாலம்.
ஏதோ அரண்மனை அகழியைப்போல கிழக்கிலிருந்து ஒரு பெரும்பள்ளம் பாதையாக வருகிறது...
மேற்கிலிருந்து ஒருபெரும்பள்ளம் பாதையாக வருகிறது...
இரண்டு பக்கத்திலிருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும் இடத்தில் ட வடிவில் வாகனங்கள் திரும்பமுடியாதபடி ஒரு சிறிய பாலத்திற்குள் செல்லும் நுழைவு உள்ளது.
அறந்தாங்கிச் சாலையிலிருந்து 14 அடி ஆழத்திற்குள் செல்லும் இந்த கீழ் பாலத்தில், மழைக்காலங்களில் 5 அடிக்கு மேல் மழைநீர் தேங்குகிறது.
இந்தப் பாலத்தை மக்கள் எப்படிப் பயன்படுத்த முடியும்?
வெள்ளைக்காரர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த இரயில்வே வழித்தடம், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், தேவையான இடங்களில் கேட் அமைக்கப்பட்டு, உரிய பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக இந்த வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றிட தென்னக ரயில்வே திட்டமிட்டு சுமார் 13 ஆண்டுகள் நிறைவடைந்தும் முறைப்படுத்தப்படாத இரயில்வே வழித்தடமாகவே இது உள்ளது.
ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளே!

ஆளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே!
தயவு செய்து இந்தப் படங்களைப் பாருங்கள் இந்தப்பாலத்தை எப்படிப் பயன்படுத்த முடியும்?
இந்தப் பகுதியில் பணியாளருடன் கூடிய ஒரு இரயில்வே கேட் அமைத்தால் என்ன?
கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களுக்குப் பயன்படாத பாலத்தை அமைத்தால் என்ன? அமைக்காவிட்டால்தான் என்ன?
ஒன்றிய அரசின் இரயில்வே தனியார்மயக் கொள்கைக்காக, இரயில்வே கேட்-டில் பணியாற்றும் பணியாளர்களை குறைப்பதற்காக, கிராமப்பற மக்கள் பயன்பாட்டை சிக்கலாக்குவதா?
பேராவூரணி பகுதியல் நீலகண்டபுரம் இரயில்வே கீழ் பாலம் அமைக்கும் பணிகள் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது.................. எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை.
அதற்குள் சொர்ணக்காடு, கீழக்காடு போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பாதையில் குழிதோண்டி போட்டுவிட்டார்கள்.
ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
இரயில்வே கேட்-டை பயன்படுத்தும் மக்களெல்லாம் இரயில்வே துறைக்கு அடிமைகளா? மக்களுக்குப் பயன்படாத திட்டம் மக்களாட்சியில் எதற்கு?
சொர்ணக்காடு கிராமத்திற்குள் சென்றுவர பேராவூரணியிலிருந்து பேருந்து வழித்தடம் உள்ளது. இந்த முறையற்ற முறையில் அமைக்கப்பட்டுவரும் பாலத்தால் அந்தப் பேருந்தை எப்படி இயக்குவது என்றே தெரியாதநிலைதான் உள்ளது.
சொர்ணக்காட்டில் பொதுமக்கள் கொதித்துப்போய் உள்ளார்கள்.
இரயில்வே கேட் அமைத்துத்தரவேண்டும்!
கீழ் பாலத்தை மூடவேண்டும்!!
என்ற கோரிக்கையோடு போராட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் நீலகண்டபுரம், கீழக்காடு பகுதி போராட்டக்குழுவோடு சேர்ந்து போராடுவதற்கு ஆயத்தமாகிவருகிறார்கள்.
இந்தப் போராட்டக்குழுவினர் பல்வேறு சமூகச் செயற்பாடுகளைச் செய்துவரும் அரசியல் ஆளுமைகளை அழைத்து பாலப் பணிகளை பார்வையிடச் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை அருகே ஒரு பெண் மருத்துவர் கீழ் பாலத்தில் தேங்கிக்கிடந்த மழை நீருக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் அரசும், இரயில்வே நிர்வாகமும் இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும்.

இனிமேலும் கீழ் பாலம் அமைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சொர்ணக்காடு பாலம் பணிகளை நிறுத்திவிட்டு கேட் அமைத்துக்கொடுக்க வேண்டும்.
நீலகண்டபுரம் மற்றும் கீழக்காடு பகுதிகளில் மக்கள் பயன்படுத்த மாற்றுப் பாதைகளை உருவாக்கித் தர வேண்டும்.
அல்லது அந்தப் பாலங்களையும் மூடிவிட்டு கேட் அமைத்துத்தர வேண்டும். இது மக்களுக்கான கோரிக்கை.
கருத்துகள்
கருத்துரையிடுக