பேராவூரணி தனது பெருமைமிகு புதல்வனை இழந்து நிற்கிறது.
பேராவூரணி தனது பெருமைமிகு புதல்வனை இழந்து நிற்கிறது.
நேற்றைய நாள் (11.01.2022) நாள்காட்டியில் இல்லாமலேயே போயிருக்கலாம். பேராவூரணியின் பெருமைமிகு அடையாளமாக விளங்கிய அன்பு நண்பர் கொளக்குடி வடிவேல் இறந்துவிட்டார் என்பதை இப்போதும் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அசாத்திய திறமைகளையும் அளவற்ற அன்பையும் கொண்டவர். எளிய குடும்பத்தில் பிறந்து தனது கடும் முயற்சியால் தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகும் வாய்ப்பைப் பெற்றவர்.
பேராவூரணி ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உருவாக்கிய முதல் பட்டதாரிகளுள் இவரும் ஒருவர். தனது சிறப்பான திறமைகளால் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவர். இந்தக் கல்லூரியின் முதல் முதல்வர் ஐயா மெய்ப்பொருள் அவர்களின் கரங்களால் செதுக்கப்பட்ட சிலையாக மிளிர்ந்தவர் வடிவேல்.
கல்லூரியில் ''மாணவர் முரசு'' என்ன இதழை தனது நண்பர்களோடு இணைந்து நடத்தியவர். பின்னர் எழுத்தாளர் வேட்டை பெருமாள் வழிகாட்டுதலில் ''பரிசல்'' என்ற இதழையும் நடத்தி வந்தார். அவர் முதலாண்டு படிக்கும்போது கல்லூரிக்கு வருகைதந்த "பதினாறு கவணகர்" பிரதீபா அவர்களின் நிகழ்ச்சியால் கவரப்பட்டு தானும் அவர்போன்று திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஐயா மெய்ப்பொருள் அவர்களின் வழிகாட்டுதலாலும் பாவலர் மு.தங்கவேலனார் அவர்களின் பயிற்சியாலும் சந்தக் கவிதைகள் எழுதப் பழகினார். 1330 திருக்குறளையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தார். எந்த எண்ணுக்கேற்ற குறளைக் கேட்டாலும் உடனே சொல்லும் திறனையும் பெற்றார். "மூனுக்குள் நாலுங்கோ" என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்வேறு இடங்களில் பாவலர் தங்கவேலனாருடன் சேர்ந்து நடத்தினார். இவரின் அயராத முயற்சியால் "எண்கவணகம்" கைவரப்பெற்றார். "எண்கவணக" நிகழ்ச்சிகளை பல்வேறு பள்ளிகளில் நடத்தி மாணவர்களைப் பரவசப்படுத்தினார். இவரின் முயற்சிகளையும் அதீதத் திறமைகளையும் அறிந்த கல்லூரி நிர்வாகம் கட்டணம் பெறாமல் இவரை முதுநிலை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டது.
வடிவேலுவின் அதீத ஆற்றலை அறிந்த பேராவூரணி திராவிடர் கழக பொறுப்பாளர் வை.சிதம்பரம் அவர்கள் தில்லியில் உள்ள பெரியார் பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுப் பயிற்சியில் சேர்ந்து படிக்க ஆலோசனை வழங்கி அந்தப் பயிற்சி மையத்திலேயே சேர்ந்து படிக்கச் செய்தார். பெரியார் பயிற்சி மையம் இவரை அரசுப்பணிக்குத் தயார் செய்தது. பிறகு சென்னை மனித நேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் சேர்ந்தும் பயின்றார். ஐ.ஏ.எஸ். என்ற வடிவேலுவின் இலக்கு பெரிதாக இருந்தாலும் முதலில் அவருக்குக் கிடைத்த அரசுப்பணி கிராம நிர்வாக அலுவலர் பணி. தனது சொந்த ஊரான பேராவூரணி வட்டம், நாடியம் கிராமத்தில் இருந்து தனது அரசுப் பணியை தொடங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் பணி காலத்தில் லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்! என்ற இலக்கணம் மாறாமல் எளிய மக்களின் சேவகனாக தனது பணியை செய்தார். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு தகுதியுள்ள நபர்களுக்கு அஞ்சல் அட்டைமூலம் அறிவுருத்தி அதைப் பெற்றுக்கொள்ளச் செய்வார்.
ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானவரால் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலராகவே தொடர முடியவில்லை. சம்பளமில்லா விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் போட்டித் தேர்வுகளுக்குத் தாயரானார். கருவூல அலுவலர் பணி கிடைத்தது. அதைத் தொடர்ந்து மற்றோரு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தார்.
பேராவூரணி நண்பர்கள் கொண்டாடினார்கள். மகிந்தார்கள். அரசுப்பணிக்குத் தயாராகும் யாருக்கும் உதாரணம் ஆனார் வடிவேல்.
தான் பெற்றுக்கொண்ட போட்டித் தேர்வுக்கான அறிவை பலருக்கும் கற்றுக்கொடுத்து வந்தார். வடிவேலுவின் வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று அதிகாரிகளாக, ஆசிரியர்களாக மாறியிருக்கிறார்கள். போட்டித்தேர்வுக்கு வினா விடை வடிவில் புத்தகங்களை எழுதி குவித்தார் வடிவேல்.
தனக்கான திறமைகளை திறம்பட பதிவு செய்து இந்தச் சமூகத்திற்கும் பயன்பட வாழ்ந்து வந்திருக்கிறார் வடிவேல். திருக்குறளைத் தலைகீழாக எழுத முடியுமா என்று யாரோ இவரிடம் சவால்விட அதையும் செய்து காட்டினார்.
திருக்குறள் மீதான பற்றின் காரணமாக அவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய நாடியம் கிராமத்தில் தான் பணியாற்றிய அலுவலக வளாகத்தில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்து சிலை திறப்புவிழா நிகழ்வை நண்பர்களோடும், சக அலுவலகப் பணியாளர்களோடும் இணைந்து மிகச்சிறப்பாக நடத்தினார். தமிழ்ச் சான்றோர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கி மதிப்பளித்தார்.
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தன்னோடு பயிற்சியில் கலந்துகொண்ட தனலெட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் அரசுப்பணி பெறும் வரை காத்திருந்து அரசுப்பணி கிடைத்த பிறகு திருமணம் கொண்டனர். இருவரின் அன்பால் விளைந்த இரு பெண் குழந்தைகளோடு மகிழ்வுடன் குடும்பம் நடத்திய காலத்தில் காலன் வந்து வடிவேலுவை அழைத்துக் கொண்டது பெரும் துயர்.
அன்பு நண்பர் வடிவேலுவை பிரிந்து வாழும் அன்புச் சகோதரி தனலெட்சுமியும் நுற்றுக்கணக்கான மாணவர்களும், அவரின் நண்பர்களும் வடிவேல் விட்டுச் சென்ற பணியைத் தொட்டுத்தொடர்ந்தே தங்களது துயராற்ற வேண்டும்.
துயரோடு...
மெய்ச்சுடர்.
ஐயாவின் குரல் ஆழ் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..... ஐயாவின் இறப்பானது அவர்களது குடும்பத்திற்கும், மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் மிகப் பெரிய பேரிழப்பு..... 🖤
பதிலளிநீக்குஐயா வகுப்பு மற்றும் அவரின் அசாத்தியமான திறமை இன்னும் என்னுள் மறையவில்லை நாங்கள் இருக்கும் வரை அவரும் இருப்பார் .....
பதிலளிநீக்குMiss you sir
பதிலளிநீக்குMiss u sir.. இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கீறர்கள்😥😭
பதிலளிநீக்குThere is no one fill to your space. Miss U Lots அண்ணா 😭😭😭
பதிலளிநீக்குபெரும் சோகம் துயரத்தில் பங்கேற்கிறேன்
பதிலளிநீக்குஐயா எங்களை விட்டு சென்றாலும் அவர் நினைவுகள் என்றும் எப்பொழுதும் இருக்கும் அவரின் குரல் மனதில் ஒலித்து கொண்டு உள்ளது
பதிலளிநீக்குஎன் அன்பு நண்பரின் இறப்பினை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பதிலளிநீக்கு