பேராவூரணி - இந்திராநகர் பொங்கல் விழாவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் பரிசளிப்பு


பேராவூரணி - இந்திராநகர் பொங்கல் விழாவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் பரிசளிப்பு


பேராவூரணியில் இந்திராநகர் கிராமத்தில் சித்திவிநாயகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேடைப் பதாகை, அலங்கார தோரணங்கள், பாதைதோறும் பதாகைகள் இதுபோன்ற எந்தவிதமான செயற்கைத்தனங்களுக்கும் இடம் கொடுக்காமல் கோயில் அருகில், உள்ளூர் தொழிலாளர்களைக்கொண்டு அமைக்கப்பட்ட மேடையில் சிறுவர் சிறுமிகள் தங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக்காட்டினார்கள். காலைமுதல் விளையாட்டுப்பாட்டிகள், மாலையில் கலைநிகழ்ச்சிகள் என ஊரே கலைகட்டியது.

காணும் பொங்கலன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் மறுநாள் பொங்கல்விழா பாரம்பரிய முறையில் பல கிராமங்களில் நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கே உரிய தனிச்சிறப்பு இந்த விளையாட்டு விழாக்கள். வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றும் பலரும் கிராமத்தில் ஒன்றுகூட, கிராமப்பெரியவர்கள் பார்வையாளர்களாய் அமர்ந்திருக்க, உள்ளூர் இளைஞர்கள் நிகழ்ச்சிகளைக் கட்டமைக்க, சிறுவர் சிறுமிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த ஒருநாள் நடக்கும் விழாவுக்காக கிராம மக்கள் ஆண்டு முழுதும் காத்துக்கிடப்பார்கள்.

அப்படியானதொரு விழாவாகத்தான் இந்திராநகரில் கிராமத்து மனம் மாறாமல் நடந்தது பொங்கல் விழா. தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் ஒன்றியச் செயலாளர் செ.சிவக்குமார், திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பதாக இக்கிராம இளைஞர் மன்றத்திடம் முன்னமே கூறியிருந்தார். இயக்கத்தின் சார்பில் இணைச்செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள தமிழ் நாள்காட்டியுடன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா