தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவம் தாங்கிய ஊர்தியை தில்லி நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்.
இந்நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர், ஒன்றிய தலைமை அமைச்சருக்கு தமிழ்நாட்டு ஊர்திகளை குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு முழுவதும் இதற்கான குரல்கள் எழுந்தது. தமிழ்நாட்டரசு சார்பில் கேட்டுக்கொண்டும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தமிழ்நாட்டைச் சார்ந்த விடுதலைப் போராட்ட ஈகியர்களை குடியரசு நாள் அணிவகுப்பில் ஒன்றிய அரசு தலையிட்டு
அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டைப் போன்றே கேரளா, மேற்குவங்கம் போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநில ஊர்திகளை அணிவகுப்பில் அனுமதிக்கவில்லை.
இதன்காரணமாக குடியரசு நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதன் ஒருபகுதியாக பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முதுபெரும் பெரியார் தொண்டர் அரு.நல்லதம்பி தலைமை வகித்தார். திராவிடர் கழக பொறுப்பாளர்கள் இரா.நீலகண்டன், வை.சிதம்பரம், பொன்காடு சி.சந்திரமோகன், சோம.நீலகண்டன், பின்னவாசல் வசி, இராஜா, திராவிடர் விடுதலைக்கழக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், வி.சி.க. பொறுப்பாளர் மோட்ச குணவழகன், சிபிஎம் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் கருப்பையா, வேலுச்சாமி, சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் வ.இராஜமாணிக்கம், சித்திரவேலு, பாலு, ம.தி.மு.க. பொறுப்பாளர் க.குமார், மனிதநேய ஜனநாயகக் கட்சி அப்துல் சலாம், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் சேக்இப்ராம்சா, தெட்சிணாமூர்த்தி, எல்.ஏ.எம்.சாதிக்அலி, தமிழக மக்கள் புரட்சிக் கழக பொறுப்பாளர் பைங்கால் இரா.மதியழகன், விதைநெல் இலக்கியக்கூடம் பாங்கிரான்கொல்லை புஸ்பராஜ், தமிழ்வழிக் கல்வி இயக்கப் பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.பழனிவேல், திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் பேராசிரியர் ச.கணேஷ்குமார், கெ.ஜெயபால் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில்...
தியாகச் செம்மல் சிதம்பரனார் வியாபாரியாம் வியாபாரியாம்,
காட்டிக் கொடுத்த காவிகளெல்லாம் தியாகிகளா? தியாகிகளா?
வரலாறு தெரியாதவர்கள்
நிபுனர் குழுவில் எப்படி புகுந்தனர்?
ஒன்றிய அரசே கூட்டாட்சித் தத்துவத்தைப் புதைக்காதே!
என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக