"நமது சமயம் திருக்குறள் சமயம், நமது வாழ்வியல் நூல் திருக்குறள்" என்று சொன்னவர் பெரியார் - சின்னப்பத்தமிழர் உரை
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியார் ஐம்பதாவது நினைவு நாள் கருத்தரங்கம் பேராவூரணி பேரூராட்சி விழா அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் வழிக் கல்வி இயக்க தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் திருக்குறளும் பெரியாரும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் "திருக்குறளை ஊர் தோறும் பரப்புரை செய்தவர் பெரியார், தங்களின் சமயம் திருக்குறள், தங்களின் வாழ்வியல் நூல் திருக்குறள் என்று தமிழர்கள் கூற வேண்டும் என்று அறிவுறுத்தியவர் பெரியார். மூடநம்பிக்கைகளுக்கும் சனாதனத்திற்கும் எதிராக களமாடிய அவர் திருக்குறளை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்றும் சனாதனத்திற்கு எதிராக சமூக நீதியை நிலைநாட்ட தமிழர்கள் திருக்குறளை தங்களின் வாழ்வியலாக கொள்ள வேண்டும்" என்றார்.
நிகழ்வின் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், சாக்கோட்டை இளங்கோவன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக