பேராவூரணி நகர வர்த்தகக் கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பம்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் இ.கா.ப. அவர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்வு பேராவூரணியில் நடைபெற்றது.
பேராவூரணி தனம் விழா அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மக்களை சந்தித்து காவல்துறை சார்ந்த விண்ணப்பங்களைப் பெற்று உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது.
அந்த விண்ணப்பத்தில் கூறியிருப்பதாவது,
பேராவூரணி தொகுதியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்களின் நியமிக்க வேண்டும!
பேராவூரணி பகுதியில் போக்குவரத்து காவல் பிரிவை உருவாக்க வேண்டும்!
போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்!
நகரில் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கியமான இடங்களில் காவல் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்!
என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பமாக வழங்கினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக