தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் பேராவூரணி பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை



கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 


இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 


தமிழக தேர்வுத்துறை சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து  மொத்தம் 2 லட்சத்து 36,910 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவற்றில் 2 லட்சத்து 20,880 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். 


தற்பொழுது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகள் ரமாதேவி, சரஸ்வதி, பிரியதர்ஷினி, தமிழ்ச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  


வெற்றி பெற்ற மாணவர்களை மெய்ச்சுடர் வாழ்த்தி மகிழ்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா