பேராவூரணியில் வருவாய் கிராம ஊழியர்களின் நீதி கேட்கும் காத்திருப்புப் போராட்டம்


https://youtu.be/B4pMzbyeTQc?si=PEg3NRxtLfmqLwGm

வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிராம உதவியாளர்கள் பணிவிருக்கும் பொழுது இறந்தால் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது.  கருணை அடிப்படையில் வழங்கும் பணியை உடனடியாக வழங்க வேண்டும்!


சிறப்பு காலம் முறை ஊதியத்தில் பணியாற்றி வரும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியத்தை வழங்க வேண்டும்!


பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாத தமிழ்நாடு அரசு பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.  இறந்து போன ஊழியர் குடும்பங்களும் ஓய்வு பெற்றவர்கள் குடும்பமும் இதனால் அவதியடையும் நிலை உள்ளது.  பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும்! 


உள்ளிட்ட பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா