குருவிக்கரம்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
பேராவூரணி குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளுதல், தன்னை அறிதல், இடன் அறிதல், காலம் அறிதல், வலி அறிதல், வினை செயல்வகை அறிதல் உள்ளிட்ட தலைப்புகளில் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் வழங்கப்பட்ட இந்த பயிற்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்.
ஆர்வமுடன் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து கொண்டதாகவும், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்டு தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள இந்த பயிற்சி பெரிதும் உதவியதாகவும் கூறினார்கள்.
மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இளங்கோ முத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுபாஸ்கரன், ஆசிரியர்கள் முனைவர் க சற்குணம், நீலகண்டன், குமார், சத்தியமூர்த்தி, பூங்கோதை, கிருத்திகா, நிவேதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவில் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக