பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

 


தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் மாநிலம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேரில் இருவராக தேர்வு பெற்றுள்ளனர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரமாதேவி மற்றும் பிரியதர்ஷினி.


அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, 07.10.2023 அன்று நடைபெற்றது. 


1,27,673 மாணவ மாணவியர்கள் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர்.


இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் 

(500 மாணவர்கள் 

500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000/ வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 / - வழங்கப்படும்.


பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவிகள் முதலமைச்சர் திரனாய்வுத் தேர்வில் பங்கேற்று இருந்தனர்.  இவர்களில்... 

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் த. பழனிவேல் - ஜெயந்தி இணையரின மகள் ரமாதேவியும்


செங்கமங்கலம் சுந்தர்ராஜ் - பார்வதி இணையரின் மகள் பிரியதர்ஷினியும் வெற்றி பெற்றுள்ளனர்.


தொடக்கப்பள்ளி முதல் இம்மாணவர்களின் கல்வியில் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.


வெற்றி பெற்றுள்ள ரமாதேவி, பிரியதர்ஷினி இருவருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.  எதிர்காலத்தில் ஆட்சிப் பணி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நல்ல தொடக்கமாக இத்தேர்வின் வெற்றி அமையட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா