பள்ளிக்கு நிலம் வாங்க பெருகும் ஆதரவு!
பேராவூரணி - பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சுமார் 400 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளிக்குப் போதுமான இடவசதி இல்லை. இதனால் பள்ளிக்கு அருகில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான ஆறு சென்ட் நிலத்தை பள்ளிக்காக வாங்கிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை பலமுறை நாம் இங்கு பதிவிட்டு இருக்கிறோம். கொடை உள்ளம் கொண்ட பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இதுவரை புரவலர்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் நாலரை லட்சம் நிதி இரண்டு தவணைகளாக நில உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கொடை வழங்கும் நோக்கத்தோடு கடந்த ஞாயிறன்று புரவலர்கள் பலரும் பள்ளியில் கூடி ஒன்றரை லட்சம் நிதியை பள்ளிக்கு வழங்கினர். கொடை கொடுத்த நல்லுள்ளங்கள் மருத்துவர்கள் துரை. நீலகண்டன், விவேகானந்தன், பிரேமலதா, ரஞ்சித், பொறியாளர்கள் ஏசிசி ராஜா, துரையரசன், ந.சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், திராவிடர் கழக பொறுப்பாளர் வை.சிதம்பரம், தொழிலதிபர் லண்டன் ஸ்டீல்ஸ் கனி, செந்தில்குமார், சாகுல் ஹமீது ஆகியோருக்கு பள்ளிப் புரவலர் அரிமா எஸ் கந்தப்பன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தா