மக்கள் பணியில் முடச்சிக்காடு ஊராட்சி ...!

மக்கள் பணியில் முடச்சிக்காடு ஊராட்சி ...!
----------

முற்போக்கான சிந்தனை மரபுக்கும் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்ட தலைமைப் பண்புக்கும் தலைநகராக விளங்குகிறது முடச்சிக்காடு.

 எழுச்சியும் தலைமைப் பண்பும் கொண்டு குழு மனப்பான்மையோடு செயலாற்றி வருகிறார் சக்கரவர்த்தி.

கஜா புயல் கண்டெடுத்த கிராமத்து தலைவன்...!

புயலின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க சூறாவளியாய் புறப்பட்டவன்...!

தன்னலமற்ற இளைஞனை தலைவனாக அடையாளப்படுத்தி இருக்கிறது முடச்சிக்காடு கிராமம்.

ஊரைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பது...

ஒட்டுமொத்த மக்களுக்கும் நோயெதிர்ப்பு கசாயம் வைத்துக் கொடுப்பது...

பெருநகரங்களில் இருந்து பெயர்ந்து வந்திருப்போர் வீடுகளை தனிமைப்படுத்துவது...

மக்களின் அவசர கால தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து செயலாற்றுவது...

மாநில அரசு வழங்கிய நிவாரண நிதியையும் நிவாரணப் பொருட்களையும் முறையாக வினியோகிப்பது...

மக்களைத் தாண்டி மாடுகளையும் பாதுகாக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வைப்பது..

- என மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் முடச்சிக்காடு ஊராட்சிமன்ற தலைவர் சக்கரவர்த்தி.

அவரோடு சேர்ந்து அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகிறார்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்.

"கொரோனா என்னும் கொடுநோய் பரவாமல் பாதுகாப்பதில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவருக்கும் பெரும் பங்கு இருக்கிறது.  அரசின் சட்ட திட்டங்கள் அப்படியே மக்களை கடைபிடிக்க வைப்பதில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரும் பெரும் பங்காற்ற வேண்டும்"  என்கிறார் சக்கரவர்த்தி.

மக்கள் பணியை மட்டுமே மனதில் நிறுத்தி பம்பரமாய் சுற்றி வரும் முடச்சிக்காடு ஊராட்சிமன்ற தலைவர் சக்கரவர்த்தியையும் உறுப்பினர்களையும் மனதார பாராட்டுவோம்.

கருத்துகள்

  1. முடச்சிக்காடு பஞ்சாயத்து தலைவர்,சக்கரவர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.உங்கள் சமூக சேவை தொடர்ந்து நடைபெற,உங்களுக்கு கடவுள் துணை நிற்பார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா