மருத்துவப் பணி என்பது வணிகம் அல்ல மக்களுக்கானது!

------------------------
சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும்; என்ற நிலையை மாற்றி மண்ணின் மக்கள் மருத்துவம் படித்திட வழிவகுத்த பனகல் அரசர் இந்தியாவின் சேகுவேரா..
அவர் கொண்டு வந்த சட்டத்தால் இன்று சம்ஸ்கிருதம் தெரியாத 90 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவம் படித்து மண்ணின் மக்களுக்கு மாபெரும் சேவை ஆற்றி வருகிறார்கள்.
சமூகநீதி பேசிய நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த சமத்துவம், இன்று கொடு நோய் தாக்கத்தால் துயருறும் காலத்தில் மாபெரும் தொண்டினை செய்துவருகிறது.
உலக அரங்கில் 100 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையை எட்டியிருக்கிறது கியூபா. உலகில் எங்கெல்லாம் மக்கள் மருத்துவம் வேண்டி மன்றாடுகிறார்களோ அங்கெல்லாம் தனது மருத்துவக் குழுவை அனுப்பி மகத்தான பணியை செய்து வருகிறது கியூபா அரசு.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மருத்துவ கட்டமைப்பு மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட வந்திருக்கிறது.
மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி, வட்டத் தலைநகரங்களில் மருத்துவமனைகள், தொடக்கச் சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், கிராம செவிலியர் குழுக்கள் என மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியை கொண்டுள்ளது தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு.
மருத்துவம் பயின்று வந்த மருத்துவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், ஊரகப் பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தால்தான் உயர்கல்வி படிக்க முடியும் என்ற சட்டம் இயற்றி கிராமங்கள் தோறும் மருத்துவர்களை அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.
இன்று மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - நீட் ஆல் மருத்துவத் துறையே மாண்டு விடும் அபாயம் சுற்றியுள்ளது.
நீட் பயிற்சி மையத்தில் பல லட்சங்களை கொட்டி மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் மாணவன், மருத்துவர் ஆனதும் அரசு மருத்துவமனையை நோக்கி போகாமல், ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பணி செய்து கொண்டே, மருத்துவ உயர்கல்விக்கான நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கி விடுகிறார்.
இதனால் கிராமங்களை நோக்கிச் செல்லும் மருத்துவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது எதிர்காலத்தில் இல்லாமல் போகும்.
மருத்துவம் என்பது வெறும் படிப்பு மட்டும் அல்ல இது மக்களுக்கான பண்பாடு.
இந்தக் கல்வியை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வோம். மக்களுக்கு எதிரான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கும் நீட் தேர்வை எதிர்ப்போம்.
கொரோனா என்னும் கொடுநோய் தாக்கத்திற்கு பிறகாவது சிந்திப்போம்!

கருத்துகள்
கருத்துரையிடுக