நூலைப் படி!
நூலைப் படி!
விகடன் பதிப்பகம் பதிப்பித்துள்ள மருத்துவர் துரை நீலகண்டன் அவர்கள் எழுதிய முடக்கிப்போடும் மூட்டுவலி - காரணங்களும் தீர்வுகளும் என்ற நூல் குறித்து இப்பதிவில் காண்போம்!
விவசாய பின்னணி கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று தாய்மொழி வழியாக கற்றுத் தேர்ந்த மருத்துவர் துரை நீலகண்டன் இந்த நூலை எழுதியுள்ளார்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்
கற்றதன் பயன் சமூகம் பயனுற விளக்கிக் கூறவேண்டும் அதுவே கற்றவரின் சிறப்பு என்கிறார் திருவள்ளுவர்.
வள்ளுவரின் குறளுக்கேற்ப தான் சார்ந்த துறையில் மக்களின் தேவையுணர்ந்து இந் நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர்.
நூலின் ஒவ்வொரு தலைப்புகளையும் பார்த்தவுடன் படிக்கத் தூண்டும் வகையில் அமைத்திருக்கிறார். தலைப்புகளை பார்த்தவுடன் தமக்கான சிக்கலை நோக்கி பக்கங்களை புரட்ட வைத்துவிடுகிறார்.
நுகர்வு கலாச்சாரமும் உலகமயமும் சேர்ந்து மக்களை வலியோடு வாழ வைத்திருக்கிறது. மக்களின் வலி அறிந்து வழியமைத்து தருகிறார் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் நீலகண்டன்.
கழுத்து வலி
கீழ் முதுகு வலி
இடுப்பு வலி
இடுப்பு கூட்டு மூட்டுவலி
முழங்கால் மூட்டு வலி
குதிகால் வலி
தோள்பட்டை வலி
முழங்கை வலி
போன்ற தலைப்புகளில் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள், மருத்துவ முறைகள், சிறப்பு பரிசோதனைகள், அறுவை சிகிச்சைக்கான முறைகள், உடற்பயிற்சிகள் போன்றவைகளை உரிய படங்களைக் கொண்டு விளக்கிய முறை; எல்லோரிடமும் இந்நூல் சென்று சேர வேண்டும் என்ற நூல் ஆசிரியரின் உள உணர்வை வெளிப்படுத்துகிறது.
நிறைவாக
"நீண்ட நாள் மூட்டு வலியோடு சிறந்த வாழ்க்கை" என்ற தலைப்பில் உளவியல் முறையில் நோயுற்றவரை தேற்ற முற்பட்டிருக்கிறார்.
மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தது மருத்துவம், அதை சிக்கலில்லாமல் செய்துகொள்ள உரிய அறிவு ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவசியம். தவறான செய்திகளை புறந்தள்ளி சரியான முறையில் சிகிச்சைகளைப் பெற வழிகாட்ட வேண்டியது ஒவ்வொரு மருத்துவரின் அவசியமான கடமையாகும். அந்தக் கடமையை சிறப்பாக செய்திருக்கிறார் மருத்துவர் நீலகண்டன்.
மருத்துவ நூல்களைப் படிப்பது மிகுந்த அயர்வை உண்டாக்கும். ஆனால் இன்னூல் எளிய நடையில் எளிய மக்களின் மொழி நடையோடு எழுதப்பட்டிருக்கிறது அதனால் தலைப்புக்குள் சென்றவுடன் முழுவதுமாக படித்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
எளிய குடும்பத்தில் பிறந்து, நன்கு படித்து, மருத்துவராகி, எளிய மக்களோடு தனது மருத்துவ பணியை தொடரும் ஒரு மருத்துவரால் தான் மக்களுக்கான படைப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்வது, கவிதைகள் புனைவது, தனது மருத்துவமனையில் தினம் ஒரு திருக்குறள் எழுதி போடுவது, அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் உரையாடுவது, தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்துக் கொண்டு தன்னார்வலராக செயல்படுவது போன்ற செயல்பாடுகளால் பேராவூரணி மக்களுக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் துரை நீலகண்டன் அவர்கள் தனது நூலின் ஊடேயும் தமிழ் இலக்கிய ஆர்வம், சமூக நாட்டம், ஏழை மக்களின் மீதான அக்கறை, சக மருத்துவத்துறை தோழமையின் மீது உருவாக்க விரும்பும் கடமை உணர்வு போன்ற அத்தனையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொரோனா கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தியேனும் இந் நூலை வாசித்து விடுங்கள். வலி நீங்கி வாழ வழி பிறக்கும்.
ஆசிரியர்
மெய்ச்சுடர்.

கருத்துகள்
கருத்துரையிடுக