வாணிகம் போற்றுவோம்...
வாணிகம் போற்றுவோம்...
---------------
வள்ளுவர் தோன்றாத துறையே இல்லை.
கொரோனா நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் பல நிறுவனங்கள், மக்களின் பசிப்பிணி போக்கும் பெரும் பணி செய்தாலும் சூழல் தெரியாமல், லாப வேட்கை கொண்டு பொருட்களை அதிக விலைக்கு விற்கும் நிலை தொடர்கிறது.
விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி அதிக விலைக்கு விற்பது அறம் அன்று.
இந்த காலகட்டத்தில் வள்ளுவர் கூறிய வணிக அறம் குறித்து பார்ப்போம்...
----------
வணிகர்களுக்கான திருக்குறள்கள் நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் அதிகமாக காணப்படுகிறது.
இல்லறவியல் பகுதியில் பன்னிரண்டாவது அதிகாரமாக நடுவு நிலைமை அதிகாரம் உள்ளது.
இல்லறத்தின் பண்பே, நல்லறம் கொண்டு பொருளீட்டி, நானிலம் பயனுற வாழ்வதற்கே!
பொருளீட்டும் வாய்ப்பாக வாணிகம் இருப்பதால் நடுநிலைமையோடு வாணிகம் செய்வதன் அவசியத்தை இந்த அதிகாரத்தில் ஒவ்வொரு குறளிலும் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.
-------------
பகைவர், நண்பர், உறவினர், அயலார் என எல்லா பகுதிகளிலும் ஒழுகப் படவேண்டிய அறம் நடுவு நிலைமை.
அப்படி பிரித்துப் பார்க்காமல் எல்லோரிடமும் நடுநிலைமையோடு வணிகம் செய்து ஒழுகப் பெற்ற ஒருவனுடைய செல்வம் சிதைவு இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு செல்லும்.
நன்மை தருவதாக இருந்தாலும் நடுவுநிலைமை தவறி செல்வம் ஈட்டுவதை உடனே நிறுத்திவிட வேண்டும்.
ஒருவரின் நடுவு நிலைமை கொண்ட செயல்பாட்டை, வாணிபத்தை, அவரின் வாரிசுகளின் நிலையை கண்டு தெரிந்துகொள்ள முடியும்.
ஒருவருக்கு செல்வம் வரும் போகும்! நிலையற்ற செல்வத்தை பொருட்படுத்தாது நடுவுநிலைமை தவறாமல் இருப்பது சான்றோர்க்கு அழகு.
நடுவுநிலைமை தவறிய அந்த நிமிடத்திலிருந்து நாம் கெடப் போகிறோம் என்பதை அறிய வேண்டும். மீண்டும் நடுவு நிலைமையை அணிந்து கொள்ள வேண்டும்.
நேர்மையான முறையில் நடந்து கொண்டவர்கள் வறுமையில் வாடினாலும் உலகம் அவர்களை தவறாக தூற்றாது.
துலாக்கோல் போல் வாணிகம் செய்ய வேண்டும். அதுவே சான்றோர்க்கு அழகு.
சொல் தவறாத நிலையைப் பெற்றிட, உள்ளத்தில் நேர்மை தவறிய சிந்தனை இல்லாதிருக்க வேண்டும்.
பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேணி வாணிபம் செய்ய வேண்டும்.
-------
என்கிறார் வள்ளுவர்.
பொய்யாமொழி குறள் நெறி பற்றி வாணிக அறம் பேணுவோம்.

கருத்துகள்
கருத்துரையிடுக