இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரபு என்ற பெயரில் வளரும் பார்ப்னியத்​தை ​வேரருப்​போம்... நற்சிந்தனையும், நல்லெண்ணமுமே நமது சமயம்! சமத்துவமே நமது சடங்கு!

படம்
மரபு என்ற பெயரில் வளரும் பார்ப்பனியத்​தை ​வேரறுப்​போம்!! விவரங்கள் எழுத்தாளர்:  நா.வெங்கடேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2015 நற்சிந்தனையும், நல்லெண்ணமுமே நமது சமயம்!  சமத்துவமே நமது சடங்கு! இந்து மதம் என்பது ஷண் மதம். அதாவது ஆறு சமயங்களின் தொகுப்பு. (ஷண்முகம் = ஆறுமுகம்) ஆறு சமயங்களுக்கும் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளும், விதிமுறைகளும் இருக்கின்றன. குறிப்பாக நடைமுறையில் சைவம், வைணவம் என்ற இருவேறு பெரிய சமயங்கள் வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பூசனைக்கானச் சடங்கு முறைகளைக் கூறும் விதிமுறைகளை ஆகம விதி முறைகள் என்று கூறுகிறார்கள். இந்த ஆகமம் ஒரே சீரான நடைமுறையை கோவில்களுக்குள் கொண்டுவருவதற்கு உதவும் சட்டமே. எப்படி என்றால்... சாலையில் நடக்கும் போது இடது பக்கமாகச் செல்லவேண்டும் என்பது சாலை விதிமுறை, அதுபோலவே ஆகமமும் கோவில் நடைமுறை பற்றியது. இந்த ஆகம விதிமுறைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இறை நம்பிக்கை என்பது முற்றிலும் ஆகம விதியிலிருந்த

பணி வாய்ப்புகள் இல்லாத பாடங்களுக்கு பி.எட்.

பணி வாய்ப்புகள் இல்லாத பாடங்க ளுக்கும்  பி.எட். ஆசிரியர்கள் பணிவாய்ப்பில்லாத , பள்ளிகளில் நடத்தப்படாத பாடங்களுக்கெல்லாம் பி.எட். படிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றன தமிழகப் பல்கலைக்கழகங்கள்.   பொதுவாக பள்ளிகளில் தேவைப்படும் பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்களை உருவாக்கித் தரும் வேலையை , பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் , செய்து வந்தன. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பட்டம் வழங்கும் பொறுப்பைத் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு தமிழக பல்கலைக்கழகங்களும் பி.எட். , பட்டப் படிப்பினை வழங்கி வருகின்றன.                 இப்பல்கலைக்கழகங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களே தேவைப்படாத பாடங்களுக்கும் பி.எட். படிப்பை வழங்கிவருவதால் , இப்படிப்பிற்குப்பின் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.                   இதுவரை வணிகவியல் , பொருளாதாரம் , அரசியல் போன்ற பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் பி.எட் படிக்க முடியாது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு வரை இப்பாடங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படு

​பேராவூரணி அரசு கல்லூரிக்கு ​மேனாள் அ​மைச்சர் எம்.ஆர்.​கோ​வேந்தன் ​பெயர் ​வைத்திட வலியுறுத்து​வோம்.

படம்
​பேராவூரணி அரசு கல்லூரிக்கு  எம்.ஆர்.​கோ​வேந்தன்  ​பெயர் ​வைத்திட  வலியுறுத்து​வோம். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள்.  அவர் அ​மைச்சராக  இருந்த  காலத்தி​லே​யே  ​பேராவூரணி பகுதிக்கு  கல்லூரி  அ​மைக்க​வேண்டும் என்ற  ​பேராவா  ​கொண்டிருந்தார். ஐயா அவர்கள் பிறந்த முடச்சிக்காடு பகுதியி​லே​யே ​ பேராவூரணி அரசு கலைக்கல்லூரி  தொடர்ந்து ​செயல்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது​.  இந்நி​லையில் ​​பேராவூரணி வளர்ச்சியில்  ​பெரும்பங்கு  ​கொண்ட ​எம்.ஆர்.​கோ​வேந்தன்  அவர்களின்  ​பெய​ரை  இக்கல்லூரிக்குச்  சூட்ட​வேண்டும் என்று  ​மெய்ச்சுடர்  சார்பில் ​கோரிக்​கை ​வைக்கி​றோம்.  எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் சீரிய முயற்சியால்தான் பேராவூரணி தொகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தொகுதி வளர்ச்சி கண்டது. பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து பேராவூரணியைப் பிரித்து பேராவூரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், தீயண

இந்திய ஒன்றியம் முழுவதும் வேண்டாம் ! தமிழ்நாட்டில் மட்டும் போதும் !

இந்திய ஒன்றியம் முழுவதும் வேண்டாம் ! தமிழ்நாட்டில் மட்டும் போதும் ! தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் படிவங்கள். தமிழில் தகவல்கள் தாருங்கள் ! தமிழ்நாட்டில் அனைத்து வங்கிகளிலும் தமிழில் படிவங்கள், தகவல்களைத் தாருங்கள் ! தமிழ்நாட்டில் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்களை, படிவங்களை, பத்திரங்களைத் தமிழில் தாருங்கள் ! தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் (அனைத்து சமயக் கோவில்களிலும்) தமிழில் மட்டுமே பூசனைச் சடங்குகளைச் செய்திடும் சட்டத்தைத் தாருங்கள் ! தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களில் தமிழில் மட்டுமே கல்வியை வழங்கிடுங்கள் ! தமிழ்நாட்டின் நீதி மன்றங்களில் தமிழில் வழக்குரைக்க நீதி வழங்க வாய்ப்பைத் தாருங்கள் ! தமிழ்நாட்டுக்கு தமிழ் இதழ்களை/ஊடகங்க ளை வழிநடத்த, உரிமம் வழங்க அனுமதி தாருங்கள் ! தமிழ்நாட்டுச் சச்சரவுகளைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள தமிழ் நாட்டில் உச்சநீதிமன்ற கிளையைத் தாருங்கள் ! தமிழ்நாட்டுக்குள் இயங்கும் அரசு அலுவலகங்களில் தமிழ் மக்களின் சேவைக்காக பணியமர்த்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழ்நாட்டில் தமிழில் நடத்

தினமணி (24.10.2015) திராவிட-ஆரிய மாயை! கட்டு​ரைக்கு மறுப்பு

இன்றைய தினமணி இதழில் (24.10.2015) பத்மன் என்பவர் எழுதிய திராவிட-ஆரிய மாயை என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. இதற்கு மறுப்பு ​தெரிவித்து எழுதப்படுகிறது இக்கட்டு​ரை இக்கட்டு​ரையில் திராவிட-ஆரிய இன வேற்றுமைகள் இல்லாததுபோல சித்தரித்து கட்டுரை எழுதியுள்ளார்.   கட்டுரையின் தொடக்கத்திலேயே இந்திய சமயங்களின் தொகுப்பிற்கு இந்து என்று பெயர் வந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்திய சமயங்கள் யாவும் இந்து மதத்திற்குள் இல்லை என்பதே உண்மை. பெளத்தமும் , சமணமும் இந்து சமயத்திற்குள் இல்லாமல் போய்விட்டதே ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்திய சமயங்களில் தொகுப்புகளுக்கு இந்து என்ற பெயரைக் கூறிக்கொண்டு இந்திய சமயங்களின் தனித்தன்மையை அழித்துவிட்டது என்பதுதான் இந்துமதத்தின் மீதான குற்றச்சாட்டாகும். இந்து மதத்தின் புனித நூலாக , இந்திய சமயங்கள் வழங்கிய குறிப்பாக சைவம் வழங்கிய சித்தாந்தத் திரட்டோ , பன்னிரு திருமுறைகளோ , ஆழ்வார்களின் பாயிரங்களோ புனித நூலாக இல்லாமல் பாகவத் கீதை மட்டும் எப்படி புனித நூலாக மாறியது என்பதுதான் இன்றையச் சிக்கல். " இந்து மதம் வேறு, தமிழர்கள் வேறு " என்று தமிழரிஞர்கள்

அரச பயங்கரவாதம்

படம்
அரச பயங்கரவாதம் பந்நெடுங்காலமாகவே பாட்டாளிகளும் , உழைப்பாளிகளும் நிலப்பிரபுக்களாலும் , அரசாங்கத்தாலும் சுரண்டப்பட்டும் , ஒடுக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள்.  உரிமைகள் மறுக்கப்பட்டடு , உழைப்பு சுரண்டப்பட்டு , கொத்தடிமைகளாக உழைப்பவர்களை கருதும் மனநிலை , அடிப்படை நிலையிலிருந்து அரசுக் கட்டில் வரை தொடர்கிறது. அதற்கு தற்கால சாட்சிதான் ஆந்திராவில் இருபதுபேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.   உழைக்கும் அடித்தட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நிலமிழந்து , சுயம் இழந்து , மொழி இழந்து அந்நியப் பகுதியில் அடிமைகளாக வாழ அடிப்படை காரணமே மக்களிடம் காணப்படும் ஆதிக்க சிந்தனைதான்.  சமூகத்தால் அருகாமையில் இருக்கும் உழைப்பாளிகள் , விவசாயக்கூலிகள் , தொழிலாளர்கள் மதிப்பளிக்கப்படாதபோது அவர்கள் பிழைக்கப் போன இடத்திலும் இதே கொடுமைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுவும் அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்ற பயங்கரவாதம்தான் ஆந்திராவில் நடந்த 20 கூலித்தொழிலாளர்களின் கொலை.   ஆந்திராவோ , தமிழ்நாடோ , இந்தியாவோ யாருக்காக அரசு இயந்திரம் செயல்படுகிறது

மக்கள் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.

படம்
பேராவூரணி சேது சாலையில் அமைந்துள்ளது வினோத் டவர். இக்கட்டிடத்தில் மருத்துவச் சேவை செய்து வருகிறார் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.  அரசுப் பணி ஓய்வுக்குப் பின் சமூக அக்கரையோடு சிறப்பான மருத்துவச் சேவை செய்துவரும் இவர், வெள்ளிக் கிழமைகளில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். தனது தனித்துவமான பணி அனுபவத்தால் நோயாளியின் மன உணர்வை உணர்ந்து ஆலோசனை வழங்குவதில் வல்லவர். "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்   வாய்நாடி வாய்ப்பச் செயல்"   என்ற திருக்குறள் நெறியின் படி மருத்துவம் செய்து வருகிறார். பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை முற்றிலுமாக புறக்கணிக்கும் போக்கு இருக்கும். ஆனால் இவரோ நமது பண்பாட்டு தமிழ் மருத்துவ அறிவையும் உள்ளடக்கி ஆலோசனை வழங்கி வருபவர். நோயாளியின் பதட்டத்தைத் தனித்து நோய் குறித்து அவர்களிடம் பேசி, மருத்துவருக்கும், நோயாளிக்குமான இருக்கத்தைக் குறைத்து நோயைப் பற்றிய பயத்தை நீக்கி மனவியல் ஆலோசனை வழங்குவதில் தனிச் சிறப்பு மிக்கவர். வியாபார நோக்கத்தோடு அல்லாமல் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், அ

சீரழியும் பள்ளிகள்! சிறக்குமா எதிர்காலம்!

படம்
"சிங்கிட மணி சிங்கிட மணி", "ஏக் தோ தீன் சார் சொல்லித் தாரேன்", "சித்தாடை கட்டிக்கிட்டு", "தங்கமான ஊதாரி" இந்தப்பாடல்கள்களுக்கு திரைக்கலைஞர்கள்(?) போலவே அச்சு அசலாக நடனமாடும் மேடைகளை தற்போது தொடர்ந்து பார்க்க முடிகிறது. தெருக்கூத்து மேடையோ, கோவில் விழாக்களின் நள்ளிரவு நடன மேடையோ அல்ல. அத்தனையும் பள்ளி மேடைகள். பள்ளிச் சிறுவர்களை ஆபாச வரிகள் அடங்கியப் பாடல்களுக்கு நடனமாடவிட்டு வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது நமது ஆசிரியச் சமூகம்.  ஒருபக்கம் அரசுப்பள்ளிகளெல்லாம் மூடக்கூடிய அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அரசுத் துறையை இழுத்து மூட அரசும், ஆட்சியாளர்களும் கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. இப்போதே பல அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளுக்க

இந்தியச் சூழலும்-ஒபாமா கருத்தும்

படம்
இந்தியச் சூழலும்-ஒபாமா உ​ரையும் பட உதவி: தினத்தந்தி இ​ணையம் மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும் - ஒபாமா உரை - ஊடகச் செய்தி இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையை உலகமே கடைபிடிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியாவில் அது கேள்விக்குறியாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் இந்த கருத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது.  தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து, கிறித்தவமோ, இசுலாமோ பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலெல்லாம் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறதா என்ற நோக்கிலேயே விவாதித்து வருகிறார்கள். ( 27.01.2015 புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ச.கவின் பொறுப்பாளர் இராகவனின் கருத்து) உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை நாம் சொன்னால் ஆட்சியாளர்கள் பகவத் கீதையை முன்மொழிகிறார்கள். மத்திய அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் சமற்கிருதம் கட்டாயப்படுத்தப்படுகிறது. மதச் சிறுபான்மை மக

இந்தி வேண்டும் என்று சொல்லும் தமிழர்களே...

படம்
இந்தி வேண்டும் என்று சொல்லும் தமிழர்களே... உங்களுக்கான பிரச்சனை என்ன? நாம் வடநாடு சென்றால்   வடநாட்டில் உள்ளவர்கள் நம்மை மதிப்பதில்லை என்பதுதானே?   அவர்கள் மதிக்கவில்லை என்பது   நீங்கள் இந்தி தெரியாதவர் என்பதால் அல்ல.   அவர்களுக்கு மரியாதை தெரியவில்லை என்பதால்.   ஒன்றை சிந்தித்துப் பாருங்கள்...   நம் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் வட நாட்டினர் எல்லாம் அங்கு பள்ளியில் தமிழைக் கற்றுக்கொண்டா தமிழகம் வருகிறார்கள்?   இங்கு வரும் வடஇந்தியர்களை தமிழ் தெரியாதவர்கள் என்பதற்காக நாம் அவர்களை அலட்சியம் செய்கிறோமா என்ன?   தமிழக எல்லைப் பகுதியில் பணிபுரியும் வடமாநில இராணுவவீரர்கள் தமிழகத்தில் மதிக்கப்படுகிறார்கள்.   ஆனால் வடமாநிலங்களில் பணிபுரியும் தமிழர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றால் காரணம் என்ன? அதற்காக நீங்கள் பள்ளியிலேயே இந்தி கற்றுக் கொண்டு போகவேண்டும் என்பதில்லை வடமாநிலத்தவற்களுக்கு மரியாதையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.   அது எப்போது நடக்கும் நீங்கள் உங்களை தமிழர்களாக இந்தியாவில் எல்லா உரிமையும் பெற்ற தமிழர்களாக உணரும்போதும்,