மக்கள் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.
பேராவூரணி சேது சாலையில் அமைந்துள்ளது வினோத் டவர். இக்கட்டிடத்தில் மருத்துவச் சேவை செய்து வருகிறார் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.
அரசுப் பணி ஓய்வுக்குப் பின் சமூக அக்கரையோடு சிறப்பான மருத்துவச் சேவை செய்துவரும் இவர், வெள்ளிக் கிழமைகளில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். தனது தனித்துவமான பணி அனுபவத்தால் நோயாளியின் மன உணர்வை உணர்ந்து ஆலோசனை வழங்குவதில் வல்லவர்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்ற திருக்குறள் நெறியின் படி மருத்துவம் செய்து வருகிறார்.
பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை முற்றிலுமாக புறக்கணிக்கும் போக்கு இருக்கும். ஆனால் இவரோ நமது பண்பாட்டு தமிழ் மருத்துவ அறிவையும் உள்ளடக்கி ஆலோசனை வழங்கி வருபவர்.
நோயாளியின் பதட்டத்தைத் தனித்து நோய் குறித்து அவர்களிடம் பேசி, மருத்துவருக்கும், நோயாளிக்குமான இருக்கத்தைக் குறைத்து நோயைப் பற்றிய பயத்தை நீக்கி மனவியல் ஆலோசனை வழங்குவதில் தனிச் சிறப்பு மிக்கவர்.
வியாபார நோக்கத்தோடு அல்லாமல் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், அளவான மருந்துக்கள் என இருக்கிறது இவரின் ஆலோசனைச் சீட்டு. குழந்தைகளை இவரைக் காட்டி பயமுறுத்த முடியாது. ஒரு தாத்தாவைப் போல் குழந்தைகளிடம் பழகும் மனப்பங்குடையர். சிறப்பான சேவையால் இப்பகுதி மக்களால் பாராட்டப்பெறுகிறார் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.
ஐயாவின் சிறப்பான பணிக்கு மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக