​பேராவூரணி அரசு கல்லூரிக்கு ​மேனாள் அ​மைச்சர் எம்.ஆர்.​கோ​வேந்தன் ​பெயர் ​வைத்திட வலியுறுத்து​வோம்.

​பேராவூரணி அரசு கல்லூரிக்கு  எம்.ஆர்.​கோ​வேந்தன்  ​பெயர் ​வைத்திட  வலியுறுத்து​வோம்.


எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள்.  அவர் அ​மைச்சராக  இருந்த  காலத்தி​லே​யே  ​பேராவூரணி பகுதிக்கு  கல்லூரி  அ​மைக்க​வேண்டும் என்ற  ​பேராவா  ​கொண்டிருந்தார். ஐயா அவர்கள் பிறந்த முடச்சிக்காடு பகுதியி​லே​யே ​பேராவூரணி அரசு கலைக்கல்லூரி தொடர்ந்து ​செயல்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது​.  இந்நி​லையில் ​​பேராவூரணி வளர்ச்சியில்  ​பெரும்பங்கு  ​கொண்ட ​எம்.ஆர்.​கோ​வேந்தன்  அவர்களின்  ​பெய​ரை இக்கல்லூரிக்குச் சூட்ட​வேண்டும் என்று  ​மெய்ச்சுடர்  சார்பில் ​கோரிக்​கை ​வைக்கி​றோம். 

எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் சீரிய முயற்சியால்தான் பேராவூரணி தொகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தொகுதி வளர்ச்சி கண்டது. பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து பேராவூரணியைப் பிரித்து பேராவூரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமணைக்குக் கூடுதல் கட்டிடம், நகரத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதி, பேருந்து வழித்தடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு, பேராவூரணிப் தொகுதி வளர்ச்சியைக் கண்டது.


இவர் ஒரு பெரியாரியல் சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபாண்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெருந்தலைவராக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துவருகிறார். நேர்மைக்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கக்கன் போன்ற தலைவர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படக்கூடியவர். எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் வாழ்வு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டிய வரலாறாகும். எனவே அவர் வாழ்ந்த இப்பகுதியில் அவரது ​பெயரில் இக்கல்லூரி  ​செயல்பட்டால்  எதிர்கால த​லைமு​றை இவரின் வரலாற்​றை அறிய ​பெரும் வாய்ப்பாக  அ​மையும்.

இந்நி​லையில் இக்கல்லூரிக்கு ம​றைந்த  முன்னாள் குடியரசுத்த​லைவர் அப்துல்கலாம்  ​பெய​ரைச்சூட்ட​வேண்டும்  என்றும்  கூறிவருகிறார்கள். அப்துல்கலாம்  ​பெயரில்  தமிழகத்தில்  பல்​வேறு  கல்வி  நிறுவனங்கள் இயங்கிவருகிறது.  ஆனால் நம்பகுதியில்  ​போற்றுதலுக்குரியவராக  வாழ்ந்து ம​றைந்த  எம்.ஆர்.ஜீ.  ​பெயர்  அ​மைந்தால்  சிறப்பாக அ​மையும்.

கருத்துகள்

  1. மிக முக்கியமான கோரிக்கை தோழர், மீண்டும் இணைந்து வலியுறுத்துவோம்

    பதிலளிநீக்கு
  2. மிக முக்கியமான கோரிக்கை தோழர், ஒரு பெருந்தலைவர் வாழ்ந்து மறைந்த சுவடே இல்லாமல் உள்ளது. மீண்டும் இணைந்து வலியுறுத்துவோம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா