இந்திய ஒன்றியம் முழுவதும் வேண்டாம் ! தமிழ்நாட்டில் மட்டும் போதும் !

இந்திய ஒன்றியம் முழுவதும் வேண்டாம் ! தமிழ்நாட்டில் மட்டும் போதும் !


தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் படிவங்கள். தமிழில் தகவல்கள் தாருங்கள் !
தமிழ்நாட்டில் அனைத்து வங்கிகளிலும் தமிழில் படிவங்கள், தகவல்களைத் தாருங்கள் !
தமிழ்நாட்டில் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்களை, படிவங்களை, பத்திரங்களைத் தமிழில் தாருங்கள் !
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் (அனைத்து சமயக் கோவில்களிலும்) தமிழில் மட்டுமே பூசனைச் சடங்குகளைச் செய்திடும் சட்டத்தைத் தாருங்கள் !
தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களில் தமிழில் மட்டுமே கல்வியை வழங்கிடுங்கள் !
தமிழ்நாட்டின் நீதி மன்றங்களில் தமிழில் வழக்குரைக்க நீதி வழங்க வாய்ப்பைத் தாருங்கள் !
தமிழ்நாட்டுக்கு தமிழ் இதழ்களை/ஊடகங்க ளை வழிநடத்த, உரிமம் வழங்க அனுமதி தாருங்கள் !
தமிழ்நாட்டுச் சச்சரவுகளைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள தமிழ் நாட்டில் உச்சநீதிமன்ற கிளையைத் தாருங்கள் !
தமிழ்நாட்டுக்குள் இயங்கும் அரசு அலுவலகங்களில் தமிழ் மக்களின் சேவைக்காக பணியமர்த்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழ்நாட்டில் தமிழில் நடத்துங்கள் !
இந்தியா முழுவதும் தமிழ் பேசாத தேசியங்களில் எல்லாம் தமிழைத் திணித்திடும் எண்ணம் எங்களுக்கில்லை. எங்கள் மாநிலத்திற்குள் எங்களின் மொழியை முழுமையாகப் பயன்படுத்துங்கள் என்றுதான் கூறுகிறோம்.
இது எங்களின் அடிப்படை உரிமை அல்லவா?
எங்களின் தமிழ் மொழிக்கு எழுத்துக்கள் இருக்கிறது, எங்களின் தமிழ் மொழிக்கு சொந்தமாக சொற்கள் இருக்கிறது, எங்களின் தமிழ் மொழியைப் பேச மக்கள் இருக்கிறார்கள்.
பிறகென்ன தயக்கம்,
எங்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகளே ! எங்களுக்கான உரிமைகளை வழங்குங்கள் !
பெருமை பீற்றிக் கொள்ளவோ,
பிற இன மக்களின் மீது வலுக்கட்டாயமாகத் தமிழைத் திணிக்கவோ நாங்கள் ஆதிக்கச் சிந்தனையுள்ளவர்கள் கிடையாது.
பயன்பாட்டில் இல்லாத எந்த மொழியும் அழிந்துபோகும். எவ்வளவுதான் புனிதம் பூசப்பட்டிருந்தாலும் பயன்பாடற்ற மொழியால் பயனில்லை. நமது மொழி புனிதமொழியாக இருக்க வேண்டியதில்லை. பயன்பாட்டு மொழியாக இருக்கட்டும்.
தமிழ் ஆட்சி மொழிக் கொள்கையை முழுமையாகச் செயல்படுத்து என்று தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா