அரசு சாரா மின் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும்! - தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கக் கிளைத் திறப்பு விழாவில் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றிய அளவில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கக் கிளை தொடங்கப்பட்டது.
மாவட்ட அமைப்பு செயலாளர் புவனேசன் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் மாநில தலைவர் சி.மாயாண்டி அவர்கள் சங்க கொடியேற்றி பெயர்பலகை திறந்து வைத்திட நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் திருவள்ளூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதி-2 தஞ்சாவூர் பகுதி -1, 2 அம்மாபேட்டை ஒரத்தநாடு பகுதி-1,2 பாபநாசம் கட்டயங்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் டி. செல்வராசு தலைவராகவும் சி. சண்முகம் செயலாளராகவும் இரா.மாரிமுத்து பொருளாளராகவும் சி.மணியரசன் துணைத் தலைவராகவும் எஸ்.ராஜேந்திரன் துணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு சங்கத்தின் மாநில தலைவர் அவர்களால் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு சாரா மின் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும்!
உறுப்பினர்கள் அனைவரும் அரசு வழங்கும் வாரிய அட்டை பதிவு செய்யப்பட வேண்டும்!
அனைவரும் மின் உரிமம் பெற்று மின் பணி செய்ய வேண்டும்!
தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்ற எச் மின் உரிமம் தகுதிக்கான தேர்வை வருடந்தோறும் நடத்தப்பட வேண்டும்! என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
சங்கம் அமைத்து சமூகம் காக்கும் பண்பு தமிழ் நிலப்பரப்பின் மிகப் பழமையான அறிவுப் பண்பாடாகும். உரிமைகளை வென்றெடுக்கவும் வலிமையை பெறவும் சங்கமாக செயல்படுவது துறை சார்ந்து பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். பேராவூரணி கிளை அமைப்பை தொடங்கி பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக