தலைமுறை மாற்றத்திற்காக செயலாற்றியவர் காமராஜர் - திசைகள் 19 ஆண்டு விழாவில் கவிஞர் ஜீவி பேச்சு.
மருத்துவர் லட்சுமி நாராயணன் தனது ஏற்புரையில், "எனது தாத்தாவின் கனவு தனது பிள்ளைகளை அறுவை சிகிச்சை மருத்துவர்களாக்க வேண்டும் என்பது. மாடு முட்டியதில் குடல் சரிந்து, சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்றிருந்த ஒருவரை, ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியதை கண் முன் கண்ட எனது தாத்தாவிற்கு அந்த சிந்தனை உருவானது. தனது பிள்ளைகள் மருத்துவம் படிக்க விரும்பாததால் பேரனான என்னை பல்வேறு மருத்துவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி என்னை மருத்துவராகினார். என் தாத்தாவின் சிந்தனை என்னில் நிறைவேறியது. எனது மகன் என்னை விட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக வளர்ந்து நிற்கிறார். திருவள்ளுவர் வலியுறுத்திய
"தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர் கெல்லாம் இனிது"
என்ற திருக்குறளுக்கு இப்பொழுது என்னால் பொருளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் வந்துள்ளீர்கள். உங்களது இலக்கு நிச்சயம் நிறைவேறும். இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய கவிஞர் ஜீவி, தனது உரையில், "மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை பெற்றோர்களின் கைரேகையைத் தகுதியாகக் கொண்டு செயல்படுத்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராசர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தயாராகி வருகிறார்கள்.
இன்று ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறிப்பதற்காக ஊழல் மலிந்த நீட் என்ற தகுதி தேர்வை நடத்துகிறது ஒன்றிய அரசு. ஆனால் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திசைகள் அமைப்பு இலவசமாக நீட் தேர்வு பயிற்சி மையத்தை நடத்திக் கொண்டே நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடி வருகிறது" என்றார்.
அமைப்பின் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி திசைகளின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். கரம்பக்குடி வட்டாட்சியர் ஜபருல்லா, மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலக்கிய ஆளுமைகள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள், மருத்துவர்கள் என தலைமுறை மாற்றத்திற்காக செயலாற்றியவர் காமராஜர் - திசைகள் 19 ஆண்டு விழாவில் கவிஞர் ஜீவி பேச்சு.
-----------------------------
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் ஆண்டு விழா அறந்தாங்கியில் நடைபெற்றது. இந்திய மருத்துவ கழகம் அறந்தாங்கி தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்த புதுக்கோட்டை குழந்தைகள் மருத்துவர் ராமதாஸ், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கே எம் சுப்பையா, பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் சிலட்டூர் சேதுராமன், அறந்தாங்கி சுழற் சங்கத்தின் மேனாள் தலைவர் கராத்தே கண்ணையன், அறந்தாங்கி கிளை இந்திய மருத்துவக் கழகத்தின் மேனாள் தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும், திசைகள் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவும் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
மருத்துவர் லட்சுமி நாராயணன் தனது ஏற்புரையில், "எனது தாத்தாவின் கனவு தனது பிள்ளைகளை அறுவை சிகிச்சை மருத்துவர்களாக்க வேண்டும் என்பது. மாடு முட்டியதில் குடல் சரிந்து, சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்றிருந்த ஒருவரை, ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியதை கண் முன் கண்ட எனது தாத்தாவிற்கு அந்த சிந்தனை உருவானது. தனது பிள்ளைகள் மருத்துவம் படிக்க விரும்பாததால் பேரனான என்னை பல்வேறு மருத்துவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி என்னை மருத்துவராகினார். என் தாத்தாவின் சிந்தனை என்னில் நிறைவேறியது. எனது மகன் என்னை விட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக வளர்ந்து நிற்கிறார். திருவள்ளுவர் வலியுறுத்திய
"தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர் கெல்லாம் இனிது"
என்ற திருக்குறளுக்கு இப்பொழுது என்னால் பொருளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் வந்துள்ளீர்கள். உங்களது இலக்கு நிச்சயம் நிறைவேறும். இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய கவிஞர் ஜீவி, தனது உரையில், "மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை பெற்றோர்களின் கைரேகையைத் தகுதியாகக் கொண்டு செயல்படுத்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராசர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தயாராகி வருகிறார்கள்.
இன்று ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறிப்பதற்காக ஊழல் மலிந்த நீட் என்ற தகுதி தேர்வை நடத்துகிறது ஒன்றிய அரசு. ஆனால் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திசைகள் அமைப்பு இலவசமாக நீட் தேர்வு பயிற்சி மையத்தை நடத்திக் கொண்டே நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடி வருகிறது" என்றார்.
அமைப்பின் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி திசைகளின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். கரம்பக்குடி வட்டாட்சியர் ஜபருல்லா, மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலக்கிய ஆளுமைகள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள், மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் வரவேற்புரை நிகழ்த்தினார். செல்வகுமார் நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிறைவாக திசைகள் ஒருங்கிணைப்பாளர் சேது புகழேந்தி நன்றி நவின்றார்.
வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக