கடவுளை மறைத்து நிற்கும் பூசாரிகள்

 


கோவில்களில் வரிசையாக சென்று பூக்களை கொண்டு அர்ச்சிக்க எதற்கு ஒரு மனிதர் இடையில் நிற்க வேண்டும்?  


அரச மர நிழலில் அமர்ந்திருக்கும் விநாயகருக்கு அருகில் உள்ள குளத்திலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்து அர்ச்சிக்க தடை ஏதும் இல்லையே?  


அதுபோன்றே ஆலயங்கள் அனைத்திலும் தெய்வத்திருமேனிகளை அருகிருந்து அர்ச்சிக்க அனைவருக்கும் அனுமதி அளித்தால் என்ன?  


பூசாரி என்ற இடைத்தரகர் தேவையா? பூசாரி பரம்பரை அவசியமா?  


பக்தியில் ஒழுங்கை கற்பிக்க ஆகமங்கள் உதவின. அந்த ஆகமங்களை வைத்துக் கொண்டே ஒழுங்கற்ற நடைமுறைகளை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் சடங்குகளை உருவாக்கி விட்டார்கள். 


கடவுளின் பெயரால் ஒழுக்கம் வளர்வதற்கு பதில் ஏற்றத்தாழ்வுகள் ஓங்கி வளர்ந்து நிற்கிறது.  


ஒரு சில வட மாநிலங்களில் மிகப்பெரிய ஆலயங்களில் கூட கருவறை வரை சென்று வழிபட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.  


தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுதான் ஆகமம் என்று சொல்கிறார்கள்.    


பரம்பரை பழக்கம் என்ற பெயரில் பண்பாட்டை சீரழிக்கும் ஒழுங்கீனமான ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் நடைமுறைகளை மாற்றுவோம்.  


விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டமே மேலானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ள பண்பாட்டை சீரழிக்கும் சடங்கு முறைகளை மாற்றி அமைப்போம்.  


கருவறை வரை வரிசையாக சென்று வழிபாடு நடத்த உரிமை கோருவோம்.  


மனதின் குரல் கொண்டு கடவுளோடு உரையாட சமஸ்கிருதம் எதற்கு? மந்திரம் எதற்கு? ஏன் தமிழ்தான் எதற்கு? மொழி அற்ற முறையிலே மௌன வழிபாட்டை மனதில் இருந்து நடத்துவோம். மனக்கோயில் கட்டியவரைத் தான் மகான் என்கிறது தமிழ். ஒழுங்கீனமான முறைகளில் இருந்து தமிழ் பண்பாட்டுக்கு மாறுவோம்.

ஆலயங்களை தூய்மைப்படுத்த ஆட்கள் தேவை...

சொத்துக்களை பாதுகாக்க பாதுகாவலர் தேவை...

நிர்வாகம் செய்ய மேலாளர் தேவை...

பக்தனும் கடவுளும் மனதோடு பேச எதற்கு மந்திரம்?

பக்தி செலுத்த எதற்கு பூசாரி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா