சாதிப் பெருமிதங்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவோம்
பொதுவெளியில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் முதல் மரியாதை, ஜாதிய மண்டகப்படி, பரிவட்டம் போன்ற பழக்கங்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம். ------------- இந்திய ஒன்றியம் ஒரு மக்கள் குடியரசு. மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் நாடாளுமன்றம் மூலமாக இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெற்று வருகிறது. மன்னர்கள் பராமரித்த கோவில்கள் மக்களாட்சியில் அரசு வசமானதற்கு பிறகு மக்கள் அனைவருக்கும் சமமான மரியாதையும் வழிபாட்டு உரிமையும் வழங்கப்பட வேண்டியதை அரசு உறுதி செய்ய வேண்டும். விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் குடியரசை நாம் உருவாக்கிய பிறகும் கோவில்களில் முதல் மரியாதை, பரிவட்டம், சாதிய மண்டகப்படிகள் போன்ற நடைமுறைகள் இருப்பது பெரும் சோகம். உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று அறிவித்துக் கொண்டு மன்னராட்சியின் பழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்வது, பண்ணை அடிமைச் சமூகத்தின் பழக்கங்களை பின்பற்றுவது ஏற்புடையதல்ல. பாரம்பரிய பண்பாட்டு பழக்க வழக்கங்களாக சமூக ஏற்றத்தாழ்வுகளை நடைமுறைப்படுத்துவது நாகரீகம் அடைந்த சமூகத்திற்கு ஏற்றதல்ல. கோவில்களில் வளர்க