பள்ளி வளாகங்களை பளிச்சிட வைக்கும் வி.எஸ்.வி. ராகவன் கல்வி அறக்கட்டளை



பள்ளி வளாகங்களை பளிச்சிட வைக்கும் வி.எஸ்.வி. ராகவன் கல்வி அறக்கட்டளை

வெளுத்துப்போன சுவர், சொட்டை சொட்டையாய் பொறிந்து கொட்டிப் போன கரும்பலகை, அழுக்கை அப்பிக்கொண்ட அரசுப் பள்ளி கட்டமைப்பை அழகுப்படுத்தும் நோக்கில் செயல்பட தொடங்கி இருக்கிறது வி.எஸ்.வி.ராகவன் கல்வி அறக்கட்டளை. பெரும் விளையாட்டு வீரரான வி.எஸ்.வி.ராகவன் அவர்கள் பெயரில் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார் நிமல் ராகவன். நீர்நிலை மேம்பாட்டுக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் சமூக செயற்பாட்டாளரான நிமல் ராகவன் கையில் எடுத்திருக்கும் அடுத்த செயல்திட்டம் பள்ளி வளாகங்களை பளிச்சிட வைப்பது.
பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த அமைப்பு சார்பில் பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
ஓவியர் மணிகண்டன் தனது கற்பனைகளால் வளாகத்தை வண்ணமயமாக மாற்றி வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர் குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்தவர். காண்பவர் கண்களைக் கவரும் வகையில் மிக நேர்த்தியாக தனது கை வண்ணத்தைக் காட்டி வருகிறார். இவர் வரைந்து வரும் ஓவியங்கள் மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது. அரசுப் பள்ளிக்கான திட்டமிடல் என்பதால் ஏனோதானோ என்று கடமைக்கு பணி செய்யாமல் தனது ரசனைக்கு ஏற்றவாறு சுவர்களை மெருகேற்றி வருகிறார்.
பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி இருக்கும் இந்த பணி அடுத்தடுத்த பள்ளிகளிலும் தொடரும் என்கிறார் அறக்கட்டளையின் நிறுவனர் நிமல்.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா