குரூப் 2 - முதல் நிலைத் தேர்வில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள் தேர்வு

குரூப் 2 - முதல் நிலைத் தேர்வில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள் தேர்வு
----------------- பேராவூரணி திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடம் மற்றும் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்திய பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர். பேராவூரணி அருணாதேவி, பெருமகளூர் புவனேஸ்வரி, ஆவுடையார் கோவில் சுபா ஆகியோர் குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். பேராவூரணி வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் முன்னெடுப்பில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இவற்றோடு இணைந்து வர்த்தக கழக கட்டிடத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் வெற்றி பெற்ற அரசு அதிகாரிகளே தன்னார்வத்தோடு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எளிய குடும்பத்தில் பிறந்த கிராமப்புற மாணவர்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தொடக்கத்தில் பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் சிறிய அறையில் நடைபெற்ற இந்த வகுப்புகள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு நா அசோக்குமார் அவர்களின் முயற்சியால் தற்போது நகர வர்த்தக கழக கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று 09.11.2022 பேராவூரணி வட்டாட்சியர் திரு த. சுகுமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மிகக் குறுகிய காலத்தில் பயிற்சி மேற்கொண்டு தேர்வு பெற்றுள்ள மாணவர்களையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களையும் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா