பேராவூரணி மாணவி வெண்கல பதக்கம் வென்றார்



தேசிய அளவிலான இரட்டைச் சிலம்பம் போட்டியில் பேராவூரணி மாணவி வெண்கல பதக்கம் வென்றார்

---------------

பேராவூரணி புதுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் குணாலி. இவரின் பெற்றோர் கோமதி - சரவணன்.


குணாலி சிறுவயதில் இருந்தே விளையாட்டில் படுச்சுட்டி. பேராவூரணி போன்ற சிறு நகரங்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்கு பெரும்பாலும் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.  


ஆனால் குணாலியின் விருப்பத்தை புரிந்து கொண்ட இவரின் பெற்றோர்கள் குணாலி சிலம்பம் கற்றுக் கொள்ள உரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர். 


 கால்களில் சிலம்பு அணிந்து கொண்டு பரதநாட்டியம் ஆடுவதையே பெருமையாக கருதிக் கொள்ளும் பெண்ணிய சிந்தனை சமூகத்தில் சிலம்பம் கற்றுக்கொள்ள தனி ஒரு பெண்ணாக சென்றார் குணாலி. 


"எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை கணென்று கும்மியடி!"


என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் இரட்டைச் சிலம்ப பயிற்சி மேற்கொண்டு இந்திய அளவில் 2000 பேர் கலந்து கொண்ட போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார் குணாலி.


 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு கழகம் நடத்தியுள்ளது.


பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்று தற்பொழுது செவிலியர் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர் பட்டப்படிப்பு முடித்து சீருடைப் பணியில் சேர்ந்து சமூகத் தொண்டு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.








உங்களின் எண்ணங்கள் ஈடேற மெய்ச்சுடரின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.


சிலம்பப் பயிற்சி வழங்கிய பயிற்றுனர் பாண்டியன் அவர்களுக்கும் மெய்ச்சுடரின் பாராட்டுக்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா