அயராத முயற்சியால் அரசுப் பணி வாய்ப்புகளை வசமாக்குவோம் - நல்லுள்ளம் கொண்டவர்களால் நாள்தோறும் வளர்ந்து வருகிறது பேராவூரணி போட்டித்தேர்வு பயிற்சி கூடம்

திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் மற்றும் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வணிகர்கள், மாணவர்கள் பெரும் வரவேற்புடன் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது.

மார்ச் 5 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த பயிற்சிக் கூடம் தொடக்கத்தில் பெரியார் அம்பேத்கர் நூலக சிறிய அறையில் நடத்தப்பட்டு வந்தது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்களின் முயற்சியால் தற்போது நகர வர்த்தகர் கழகத்துடன் இணைந்து வர்த்தக கழக கட்டிடத்தில் விசாலமான அறையில் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பயிற்சிக் கூடத்தின் தேவைகள் ஒவ்வொன்றும் நல்லுள்ளம் கொண்டவர்களால் நிறைவு செய்யப்பட்டு வருகிறது...
தனது அயராத அரசுப் பணிகளுக்கு இடையே பயிற்சி கூட மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்து வருகிறார் வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் அவர்கள்.
பயிற்சி வழங்க முழு பொறுப்பேற்று பம்பரமாய் சுழன்று பணி செய்கிறார் பட்டுக்கோட்டை வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ் அவர்கள்.
கிராம நிர்வாக அலுவலர்கள் க.செந்தில் குமார், பூ.சிவமணி, ஆ.கார்த்தீசன், அ.அன்பரசி, பட்டுக்கோட்டை நகர் சார் ஆய்வாளர் திவ்யா, பேராசிரியர் முனைவர் பா.சண்முகப்பிரியா, ஆசிரியர் பொ.சிங்காரவேலு ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சிகள் ஏழை மாணவர்களுக்கு ஏணியாக நிற்கிறது.
மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டு அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் சிறப்பு செய்யப்படுகிறார்கள்.
பயிற்சிக் கூடத்தின் வளர்ச்சிக்காக அரசு மருத்துவமனையில் செவிலியராக இருந்து சிறப்பாக பணி செய்து பணி நிறைவு பெற்ற தனலட்சுமி அவர்கள் 500 நன்கொடை வழங்கி ஒவ்வொரு மாதமும் உதவுவதாக உறுதியளித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் அய்யா முத்தையா அவர்களின் நினைவாக ரூபாய் 500 நன்கொடையாக வழங்கினார் கொன்றைக்காடு தெட்சணாமூர்த்தி அவர்கள்.
வகுப்பறை வெண்பலகையை ரெஜினா புக் சென்டர் சா.முகமதுரபிக் வழங்கினார்.
இந்திராநகர் வ. சௌந்தரராஜன்
ஊமத்தநாடு த. இலக்கியசீலன்
இருவரும் இணைந்து பத்து இருக்கைகளைப் பெற்றுத் தந்தனர்.
வகுப்பறைச் சூழலின் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர் ஜெ. சேக்தாவுது அவர்கள் ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி அகமகிழ்ந்தார்.
தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் இந்திராநகர் செ.சிவக்குமார் அவர்களால் வகுப்பறையின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுகிறது.
வர்த்தக கழக கட்டுப்பாட்டு குழு பொறுப்பாளர்கள் வகுப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பயிற்சிக்கு இடையே மாணவர்களுக்கு சுக்குத் தேநீர் சூடாக வழங்கப்படுகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை 100-ஐ நெருங்கி வருகிறது...
பயிற்சிக் கூடத்தின் தேவைகளும் அதிகரித்து வருகிறது...
போதிய இருக்கை இன்றி வாடகை இருக்கைகளை பயன்படுத்தி வருகிறோம்.
மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடத்திற்கு ஒலிபெருக்கி தேவை இன்றியமையாததாக உள்ளது.
இந்த தேவைகளும் நிறைமாந்தர்களால் நிறைவு செய்யப்படும் என்று காத்திருக்கிறோம்.

பயிற்சி கூடத்தின் ஒருங்கிணைப்பாளர்களை
9842609980, 8248672425,
8903101116 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா