திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் மற்றும் பேராவூரணி நகர வர்த்தக கழகம் இணைந்து போட்டி தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்


பேராவூரணியில் வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் அவர்களால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது.

உரிய இட வசதியின்றி பெரியார் அம்பேத்கர் நூலகத்தின் சிறிய அறையில் வகுப்புகள் நடந்து வந்த நிலையில்,
எவ்வித இடையூறும் இன்றி மாணவர்கள் தொடர்ந்து படித்திட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் உரிய இட வசதி செய்து தருவதாக உறுதியளித்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் தற்போது
பயிற்சி வகுப்புகளை பேராவூரணி நகர வர்த்தக கழகத்துடன் இணைந்து நகர வர்த்தகர் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் பயிற்சி வகுப்புகளை தொடர்வது என முடிவு செய்து பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
பேராவூரணி நகர வர்த்தக கழக கட்டுப்பாட்டு குழு பொறுப்பாளர்கள் எஸ்.கந்தப்பன், க.அன்பழகன், எஸ்டி.டி.சிதம்பரம், தமிழ்கடல் அப்துல்மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடத்தின் பொறுப்பாளர்கள்
ஆறு.நீலகண்டன், சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்,
த. பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், முனைவர் ச.கணேஷ்குமார், பயிற்சிக் கூடத்தின் ஆசிரியர் வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இந்த கூடத்தில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சிகளில் சேர்ந்து படித்திட பயிற்சி கூடத்தின் ஒருங்கிணைப்பாளர்களை
9842609980,
8248672425,
8903101116
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா