பெரும் நம்பிக்கையோடும் மிகுந்த பொறுப்புணர்வோடும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் பேராவூரணியில் தொடங்கப்பட்டுள்ளது



ஒன்றிய - மாநில அரசுகள் நடத்தும் அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பேராவூரணியில் திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடம் என்ற பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி மையத்தின் தொடக்க விழா பேராவூரணி எம்.எஸ். விழா அரங்கத்தில் பெரியார் அம்பேத்கர் நூலக பொறுப்பாளர் தோழர் ஆறு.நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது.
பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த. சுகுமார் ஒளியேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை வாழ்த்தி பேசினார். அவர் தமது உரையில்....
அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசுப் பணிகளை பெற்றிட தொடர் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பேராவூரணியில் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அரசின் வெவ்வேறு துறைகளில் ஏராளமான அரசு அதிகாரிகளை உருவாக்கும் முயற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இந்த பயிற்சி மையத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உரிய இடவசதி வேண்டுமென்று கேட்டார்கள்.
நம் பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதற்கான வசதியை நிச்சயமாக செய்து கொடுப்பேன்.
பேராவூரணி வர்த்தக கழக கட்டிடத்தில் தற்காலிகமாக இந்த பயிற்சி மையத்தை நடத்துவதற்கு உரிய வசதிகளை செய்து தருகிறேன். அந்தக் கட்டிடத்திற்குரிய வாடகையை நானே செலுத்தி விடுகிறேன்.
மாணவர்கள் பொறுப்புணர்வோடு பயிற்சி மேற்கொண்டு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.
உங்களின் சிறப்பான பயிற்சிக்கு உறுதுணையாக நமது பேராவூரணி வட்டாட்சியர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்
" என்றார்.
பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் தனது உரையில்...
"பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் தனது முயற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். அரசுப் பணியை பெறவேண்டுமென்று உயர்ந்த இலக்கோடு உழைக்க வேண்டும். உழைப்பு ஒன்றே வெற்றியைத் தரும்" என்றார்.
வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ப.அருள்ராஜ், மருத்துவர் துரை நீலகண்டன், தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துக்குமார், வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ், முனைவர் ஆ.ஜீவானந்தம் பேராசிரியர் பா.சண்முகப்பிரியா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தொடக்க விழாவில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சிக் கூடம் சிறப்புற செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலக பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், சித திருவேங்கடம், த. பழனிவேல், பாரதி ந. அமரேந்திரன், தா. கலைச்செல்வன், இரா.மதியழகன், கோ. செந்தில்குமார் ஆகியோர் உறுதி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் செ.சிவகுமார் வரவேற்றார்.
நிகழ்வில் இந்தப் பகுதியில் அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்ய தொடர்ந்து முனைப்போடு செயலாற்றி வந்த, தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றிய, சமீபத்தில் மறைந்த கொளக்குடி திருக்குறள் வடிவேல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடக்கவிழாவில் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
போட்டித் தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றிட தேர்வுக்கூட பொறுப்பாளர்களை 9842609980, 8248672425, 9442682678 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா