பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சி

 


உலக வெப்பமயமாதல் காரணமாக பருவநிலை மாற்றம் குறித்து பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலகப் பந்தை விதைப்பந்தால் நிரப்பி பசுமை சூழலை பாதுகாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
பேராவூரணியில் தஞ்சை விதைப்பந்து என்ற பெயரில் காட்டு மரங்களை நாடெங்கும் வளர்த்திட பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தோழர் மருத உதயகுமார்.
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களில் விதைப்பந்து வழங்கும் முறையை பரப்பி வருகிறார். இன்பத்தமிழ் ஊரக வளர்ச்சி நடுவத்தோடு இணைந்து மழைக்காலங்களில் ஊரகப் பகுதி எங்கும் விதைப்பந்து தூவிடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது மாணவர்களிடம் விதைப்பந்து தயாரிக்கும் முறையை பள்ளி எங்கும் சென்று பயிற்றுவித்து விதைக்கும் பணியை பரப்பி வருகிறார்.
விதைப்பந்து தயாரிப்பதற்கான மண்ணை பக்குவப்படுத்துவது, இயற்கை உரம் தயாரிப்பது, விதை சேகரிப்பது, மண்ணையும் விதையையும் இணைத்து விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சிகளை மாணவர்களிடம் விளக்கி வருகிறார்.
இந்த பயிற்சி செயல் வழியாக வழங்கப்படும் போது, மாணவர்கள் பெரிதும் மகிழ்கிறார்கள்.
பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி இன்று வழங்கப்பட்டது.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சியை கற்றுக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா