இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாதைகளையெல்லாம் படுகுழிகளாக மாற்றும் தொடர்வண்டித் துறை... பொதுமக்கள் அவதி...

படம்
நடைமுறையில் இருந்த இரயில்வே கேட்-களையெல்லாம் மூடிவிட்டு கீழ்ப்பாலம் அமைப்பதாகக்கூறி கிராமத்திற்குச் செல்லும் பாதைகளையெல்லாம் படுகுழிகளாக மாற்றிவருகிறது இரயில்வே நிர்வாகம். 1) இந்தப் பாலம் அமைக்கும் பணிகளைத் திட்டமிடுவதற்கு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டார்களா? 2) இந்தப் பாலம் வடிவமைப்புகளுக்கு எந்தப் பொறியாளர் ஒப்புதல் அளித்தார்? 3) மக்கள் பயன்படுத்தவே முடியாத பாலங்கள் எதற்காக அமைக்கப்படுகிறது? இதற்கென்று பல கோடிகளைக் கொட்டி ஒப்பந்தம் விடப்படுகிறதே! பாலம் அமைக்கும் பணிகள் முறையாக நடக்கிறதா? திட்டமிட்டபடி நடக்கிறதா? என்பதை இரயில்வே நிர்வாகம் பார்வையிடுகிறதா, இல்லையா? 4) ஒரு பாலம் அமைக்கும் பணியை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவாச் செய்வார்கள்?  5) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் "உடனடியாக பாலம் பணிகளை முடித்துத் தருகிறோம்" என்று எத்தனைமுறை போராடும் மக்களை வைத்துக்கொண்டு வாக்களித்தார்கள்! ஒப்பந்ததாரர்களின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதா என்று இந்த இரயில்வே நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுத்ததா? 6) இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்தப்

தமிழர்களின் பெருமையைப் பாதுகாக்கும் பணிக்கு ஆசிரியர்கள் பேராதரவு

படம்
தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் இந்த ஆண்டு நம்பகுதியில் தமிழ்நாள்காட்டி அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ் உணர்வாளர்கள் தமிழ் நாள்காட்டியை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்வு குறித்து மெய்ச்சுடர் ஊடகத்தின் பதிவை படித்தவர்கள் தமிழ் நாள்காட்டி வேண்டி நம்மைத் தொடர்பு கொண்டு பெற்று வருகிறார்கள். மேலும் இந்த நாள்காட்டியை ஆசிரியர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று விரும்பினோம். முதலில் சேதுபாவாசத்திரம் பள்ளியில் நடைபெற்று வரும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டோம். பயிற்சிஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கருணாகரன் அவர்கள் மகிழ்வோடு எங்களை பள்ளிக்கு அழைத்தார். பள்ளி ஆசிரியர்களிடம் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் அறிமுகத்தையும், நாள்காட்டியின் அறிமுகத்தையும் செய்தோம். வெகுவாக வியந்த ஆசிரியர்கள் தமிழர்களின் எண்கள் பொறிக்கப்பட்ட இந்த நாள்காட்டியை பெருமை பொங்க பெற்றுக் கொண்டனர். அந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கோவி.தாமரைச்செல்வன், ரஞ்சித்குமார், காஜாமுகைதீன் ஆகியோரின் அழைப்பின் பெயரில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் ஆசிரியர்களுக்கான ப

தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவம் தாங்கிய ஊர்தியை தில்லி நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்.

படம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவம் தாங்கிய ஊர்தியை தில்லி நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பேராவூரணியில் ஆர்ப்பாட்டம். ஒன்றிய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் குடியரசு நாள் ஊர்தி அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி சுப்பிரமணியபாரதியார் ஆகியோரின் திருவுருவங்கள் தாங்கிய ஊர்தியை ஒன்றிய அரசு அனுமிக்க மறுத்தது. தொடக்கத்தில் தமிழ்நாட்டு ஊர்தியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பிரபலமானவர்கள் இல்லை என்றும், வ.உ.சி. ஒரு வணிகர் என்றும் பலவாறு கூறப்பட்டது. பின்னர் ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் ஊர்திகளைத் தேர்வு செய்வது ஒன்றிய அரசு அல்ல என்றும் அதற்கான நிபுணர் குழுதான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர், ஒன்றிய தலைமை அமைச்சருக்கு தமிழ்நாட்டு ஊர்திகளை குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு முழுவதும் இதற்கான குரல்கள் எழுந்தது. தமிழ்நாட்டரசு சார்பில் கேட்ட

"தமிழ்நாட்டு அரசு தமிழ் சித்த மருத்துவப் பயன்பாட்டினை அதிகப்படுத்த வேண்டும்" தமிழ்வழிக்கல்வி இயக்கம் கோரிக்கை.

படம்
தமிழ் சித்த மருத்துவப் பயன்பாட்டை மக்களிடம் கொண்டுசெல்ல ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டவேண்டும் என்று தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரின் அறிக்கை. பெரும் நோய்த் தொற்று காலத்தில் தமிழ் மருத்துவ முறைகளை மறுப்பதும் குமுக நீதிக்கு எதிரானதல்லவா? தமிழ்நாட்டு அரசு குமுகநீதிக்கான பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு, தமிழ்நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்கே வேலை போன்ற அரசின் அறிவிப்புகள் மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாட்டு அரசின் இத்தகையச் செயல்பாடுகளுக்கு வரவேற்பளிக்கிறோம். அதே நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக மருத்துவ நடவடிக்கைள் மூலம் மக்களைக் காக்க ஆட்சியாளர்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள். நம் தமிழ்நாட்டின் பரம்பரை மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கான ஆய்வுகளும், அதன் பயன்பாடும் இந்த நேரத்தில் அதிகமாகியிருக்க வேண்டும். மாறாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் மருத்துவ முறைகள் குறித்தும் அந்த மருத்துவப் பயன்ப

பேராவூரணி ஜேசிஐ அமைப்பிற்கு வாழ்த்துக்கள்

படம்
பேராவூரணி ஜேசிஐ அமைப்பு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய ஆட்சிமன்ற குழுவுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. தனிமனித மேம்பாட்டுக்கான பன்னாட்டு அமைப்புகளில் குறிப்பாக இந்த அமைப்புகளுக்கான பேராவூரணி போன்ற சிறிய நகரங்களில் பெண்களின் பங்கேற்பு என்பது மிகவும் குறைவு. இதுவரை இதுபோன்ற அமைப்புகளில் பெண்களின் தலைமை நம் பகுதியில் அமைந்ததில்லை.   இந்த நிலையில்  பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்ற இலக்கண மரபுக்கு ஏற்ப பேராவூரணி ஜேசிஐ அமைப்புக்கு ஒரு பெண் தலைமை ஏற்று இருப்பது பாராட்டுக்குரியது. பேராவூரணி ஆர் ஜெயலட்சுமி இந்த அமைப்பிற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.  அவர் தலைமையிலான ஆட்சி மன்ற குழு போகித் திருநாளில் பதவி ஏற்றுக் கொண்டது.  பெண் தலைமைக்கான முன்னெடுப்புகளை செய்த இந்த அமைப்பின் நிர்வாகிகள் அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள். ஜெயலட்சுமி அவர்களோடு புதிய செயலாளராக எஸ் மாதவன், பொருளாளராக கே ராஜராஜன், இணைச் செயலாளராக ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். புதிய ஆட்சிமன்ற குழு பதவி ஏற்பு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ

பேராவூரணி - இந்திராநகர் பொங்கல் விழாவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் பரிசளிப்பு

படம்
பேராவூரணி - இந்திராநகர் பொங்கல் விழாவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் பரிசளிப்பு பேராவூரணியில் இந்திராநகர் கிராமத்தில் சித்திவிநாயகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேடைப் பதாகை, அலங்கார தோரணங்கள், பாதைதோறும் பதாகைகள் இதுபோன்ற எந்தவிதமான செயற்கைத்தனங்களுக்கும் இடம் கொடுக்காமல் கோயில் அருகில், உள்ளூர் தொழிலாளர்களைக்கொண்டு அமைக்கப்பட்ட மேடையில் சிறுவர் சிறுமிகள் தங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக்காட்டினார்கள். காலைமுதல் விளையாட்டுப்பாட்டிகள், மாலையில் கலைநிகழ்ச்சிகள் என ஊரே கலைகட்டியது. காணும் பொங்கலன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் மறுநாள் பொங்கல்விழா பாரம்பரிய முறையில் பல கிராமங்களில் நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கே உரிய தனிச்சிறப்பு இந்த விளையாட்டு விழாக்கள். வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றும் பலரும் கிராமத்தில் ஒன்றுகூட, கிராமப்பெரியவர்கள் ப

எளியவர்கள் வாழ்வில் ஏற்றம்! அடிப்படை வசதியின்றி தவித்த ஏழைகளுக்கு குடிமனைப் பட்டா வழங்கியது பேராவூரணி வருவாய் நிர்வாகம்.

படம்
எளியவர்கள் வாழ்வில் ஏற்றம்! அடிப்படை வசதியின்றி தவித்த ஏழைகளுக்கு குடிமனைப் பட்டா வழங்கியது பேராவூரணி வருவாய் நிர்வாகம். ------------------ குடியிருக்க வசதியில்லாமல் தனிநபருக்குச் சொந்தமான தோப்புகளில் குடிசைபோட்டு வாழ்ந்து வந்த 68 குடும்பங்களை இனம்கண்டு அவர்களுக்கு பேராவூரணி வட்டம், ஆதனூர் வருவாய் கிராம எல்லையில் கொரட்டூர் கிராமத்திற்கு அருகில் குடியிருப்புப் பகுதியை உருவாக்கி கொடுத்திருக்கிறது பேராவூரணி வருவாய்த்துறை நிர்வாகம். திருவள்ளுவர் நாளைக் கொண்டாடிய கையோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புப் பகுதிக்கு திருவள்ளுவர்புரம் என்ற பெயரைச் சூட்டி அதற்கான பெயர்ப் பலகையை பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் பிரபாகர் கரங்களைக் கொண்டு திறக்கச் செய்துள்ளார் பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார். எளியவர்களின்பால் இரக்கமும், அவர்களுக்கான வாழ்வியல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார். வாழ இடமின்றி தோப்புகளுக்குள் குடியிருந்து கொண்டு ஒவ்வொரு மழைக் காலங்களையும் பள்ளிக் கட்டிடங்களைப் புகலிடமாக்கிக் கொண்டு வாழ்ந

திருக்குறளை வாழ்வியலாக மேற்கொள்ள வேண்டும் - திருவள்ளுவர் நாள் விழாவில் பேச்சு.

படம்
திருக்குறளை வாழ்வியலாக மேற்கொள்ள வேண்டும் - திருவள்ளுவர் நாள் விழாவில் பேச்சு. --------- திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்காக மட்டும் பயன்படுத்தாமல் வாழ்வியலாகக் கொள்ள வேண்டும் என்றார் பேராவூரணி திருக்குறள் பேரவை பொறுப்பாளர் எச் சம்சுதீன்.  திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.  பேராவூரணி தர்ஷனா மருத்துவமனை வளாகத்திற்குள் திருக்குறள் ஆர்வலரும், சிறந்த தமிழ் பற்றாளருமான மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு திருக்குறள் பேரவை தலைவர் மு தங்கவேலனார் தலைமை ஏற்றார்.  மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார். மருத்துவர் துரை நீலகண்டன், திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் ஆறு. நீலகண்டன் சித.திருவேங்கடம், முனைவர் ச கணேஷ்குமார், தா.கலைச்செல்வன், கோ.செந்தில்குமார், இரா.மாரிமுத்து, இரா மதியழகன், அ.கோவிந்தன், விவேக் மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் த பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், இந்திராநகர் சிவக்குமார், நகர வர்த்தக கழக மேனாள் பொற

பேராவூரணி தனது பெருமைமிகு புதல்வனை இழந்து நிற்கிறது.

படம்
 பேராவூரணி தனது பெருமைமிகு புதல்வனை இழந்து நிற்கிறது. நேற்றைய நாள் (11.01.2022) நாள்காட்டியில் இல்லாமலேயே போயிருக்கலாம். பேராவூரணியின் பெருமைமிகு அடையாளமாக விளங்கிய அன்பு நண்பர் கொளக்குடி வடிவேல் இறந்துவிட்டார் என்பதை இப்போதும் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அசாத்திய திறமைகளையும் அளவற்ற அன்பையும் கொண்டவர். எளிய குடும்பத்தில் பிறந்து தனது கடும் முயற்சியால் தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகும் வாய்ப்பைப் பெற்றவர். பேராவூரணி ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உருவாக்கிய முதல் பட்டதாரிகளுள் இவரும் ஒருவர். தனது சிறப்பான திறமைகளால் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவர். இந்தக் கல்லூரியின் முதல் முதல்வர் ஐயா மெய்ப்பொருள் அவர்களின் கரங்களால் செதுக்கப்பட்ட சிலையாக மிளிர்ந்தவர் வடிவேல். கல்லூரியில் ''மாணவர் முரசு'' என்ன இதழை தனது நண்பர்களோடு இணைந்து நடத்தியவர். பின்னர் எழுத்தாளர் வேட்டை பெருமாள் வழிகாட்டுதலில் ''பரிசல்'' என்ற இதழையும் நடத்தி வந்தார். அவர் முதலாண்டு படிக்கும்போது கல்லூரிக்கு வருகைதந்த "பதினாறு கவணகர்" பிரதீபா அவர்களின் நிகழ்ச்சியால் கவரப்பட்டு தான